(எம்.நியூட்டன்)
கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் க.சசிகேஷ் தெரிவித்தார்.
சட்டத்தரணி செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பாப்பிள்ளை மண்டபத்தில் நடைற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினரீக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது. இது கவலையான விடயமாக உள்ளது. கணித விஞ்ஞான துறையில் மாணவர்கள் தெரிவு செய்வது குறைவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது. சில தவறான கண்ணோட்டமோ தவறான புரிதலோ என்பது புரியாதுள்ளது.
கணித விஞ்ஞான துறைகளை விட கலைத்துறையில் வேலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையும் காணப்படுகிறது. ஆனால் கணித விஞ்ஞான துறையில் வேலை இல்லை என்று கூறுவதில்லை.
படித்து முடிந்த கையோடு ஆக குறைந்தது. ஒரு வருடம் காத்திருக்க வேண்டிவரும் அதற்குள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை கிடைத்துவிடும் அல்லது மேற்படிப்புக்கு செல்லலாம்.
கணித, விஞ்ஞான துறைக்கு தற்போதும் ஆசிரியர்கள் பற்றாகுறையாகவே உள்ளது. மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தல்களை, தயார்படுத்தல்களை செய்தால் அந்த துறையில் மாணவர்களை முன்னேற்றமடைய செய்யலாம்.
எனைய துறையைப்போல் வேலையில்லா போராட்டம் வேலையில்லா பிரச்சினைக்குள் சிக்குப் படதேவையில்லை என்பது எனது கருத்தாகும்.
கணித விஞ்ஞான துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே சட்டத்தரணி இ. செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையை நீண்டகாலமாக நடாத்திவருகிறார். அரசாங்கமும் இந்த துறையை ஊக்கப்படுத்திவருகிறது.
தற்போது இப்போட்டியில் பலமாணவர்கள் பங்குபற்றிவருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது. இது தொடரவேண்டும். இதேவேளை பல்கலைக்கழகங்களுடாகவோ அல்லது வேறு நிறுவனங்களுடாககவோ புத்தாக்க போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றிலும் மாணவர்களை ஊக்கத்தோடு பங்குபற்றவைக்க வேண்டும்.
சில் புத்தாக்க போட்டிகளில் ஒரு சில பாடசாலைகளே பங்குபற்றுகின்றன கிரமங்களில் உள்ள பாடசாலைகள் இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளன குறிப்பாக தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளது.
இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தடைகள் காணப்பட்டால் ஏற்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை சீர்செய்து கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் குறிப்பாக 2009 ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞான தூறையில் 65 வீதமனா மாணவர்கள் தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்களே கல்வி கற்கிறார்கள். தமிழ் மாணவர்களின் வீதம் குறைந்துகொண்டு செல்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM