(நெவில் அன்தனி)
கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.
இதே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீராங்கனை மல்கி மதாராவின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் வெற்றிபெற்ற இலங்கை இன்றைய போட்டியில் சகலதுறைககளிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
போட்டியின் முதல் ஓவரிலேயே விஷ்மி குணரட்ன ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தது இலங்கை அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து 10 ஓவர்களுக்குள் மேலும் 3 விக்கெட்கள் சரிந்தன. (53 - 4 விக்.)
சமரி அத்தபத்து (23), ஹர்ஷித்தா சமரவிக்ரம (11), கவிஷா டில்ஹாரி (12) ஆகிய மூவரும் பிரகாசிக்கத் தவறினர்.
இந் நிலையில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவி மனுதி நாணயக்காரவும் சிரேஷ்ட வீராங்கனை நிலக்ஷிகா சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணி சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவினர்.
மனுதி நாணயக்கார 35 ஓட்டங்களையும் நிலக்ஷிகா சில்வா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ப்றீ ஐலிங் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெஸ் கேர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
114 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவி சுசி பேட்ஸ் 47 ஓட்டங்களையும் ப்றூக் ஹாலிடே ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை இலகுபடுத்தினர்.
ஆட்டநாயகி: சுசி பேட்ஸ்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி டனேடின், பல்கலைக்கழக மைதானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM