கிரிபத்கொடையில் கடத்தப்பட்ட சுகி ; என்னை மேலும் சித்திரவதை செய்யாமல் என்னைகொலை செய்துவிடுங்கள் சேர் என மன்றாடிய குரல் - பட்டலந்த விசாரணை ஆணைக்குழுஅறிக்கை

Published By: Rajeeban

16 Mar, 2025 | 12:15 PM
image

விசாரணை பிரிவின் தளர்ச்சியற்ற முயற்சிகள் காரணமாகவும் நடந்தவற்றை நேரில் பார்த்த சிலரின் துணிச்சல் காரணமாகவும் பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும் சித்திரவதை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன என்பதை மிகதெளிவாக உணர்த்தும் ஆதாரங்கள் கிடைத்தன.

இந்த விடயத்தில் பொருத்தமான சில ஆதாரங்களை நாங்கள் இப்போது சுருக்கமாக பட்டியலிட விரும்புகின்றோம்

ஏர்ள் சுகி பெரேரா

ஏர்ள் சுகிபெரேரா சுகாதார அமைச்சில் 1988 முதல் சிற்றூழியராக பணிபுரிந்தவர்.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது அவர் ராகம புனர்வாழ்வு மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளார்.

தளுகம களனியை சேர்ந்தவரான இவர் பகுதிநேர தொழிலாக லொத்தர்சீட்டுகள் விற்பதிலும் ஈடுபட்டுவந்தார்.(கிரிபத்கொடவில் வைஎம்பிஏ கட்டிடத்திற்கு முன்னால்)

மருத்துவமனையிலிருந்த வந்த பின்னர் மாலைநேரங்களில் இதனை செய்துவந்தார்.

1990ம் ஆண்டுமார்ச் 23ம் திகதி மாலை ஏழரை மணியளவில் சுகிபெரேரா தனது லொத்தர் சீட்டுகள் விற்கும் நிலையத்தில் அமர்ந்திருந்தவேளை ஒரு வெள்ளை வான் ஒன்று அவரை நோக்கிவந்துள்ளதுஇ அதிலிருந்தவர்கள் அவரை பார்த்து நீ சிட்னியா என கேட்டுள்ளனர்.

சுகி பெரேராவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் அவரை சிட்னி என அழைப்பது வழமை எனினும் அச்சம் காரணமாக அவர் தான் சிட்னி இல்லை எனதெரிவித்துள்ளார்.

எனினும் அவரது பதிலால் திருப்தியடையாத ஆயுதமேந்திய நபர்கள் அவரை அவர்லொத்தர் சீட்டுகள் நிலையத்திலிருந்து   இழுத்துஇவானிற்குள் ஏற்றியுள்ளனர்.

வான் அங்கிருந்து புறப்பட்டுள்ளதுஇ வானிற்குள் ஆயுதமேந்திய பலர் காணப்பட்டுள்ளனர்இவானிற்குள் இருந்த இருவர் தாங்கள் அணிந்திருந்த முககவசத்தை அகற்றியுள்ளனர்இஅவ்வேளை தன்னை கடத்திய ஒருவர் களனிநாசகார செயல் எதிர்ப்பு பிரிவின்  சார்ஜன்ட் மேஜர் ரத்நாயக்க என சுகி அடையாளம் கண்டுள்ளார்இ மற்றைய நபரை அவரால் அடையாளம் காணமுடியவில்லை.

அந்த வான் கண்டிவீதி வழியாக பயணித்து கடவத்தையை சென்றடைந்துள்ளது. வெவல்துவவில் வான் நின்றுள்ளது ஒருவர் வானிற்குள்  ஏறியுள்ளார்.அவர் பொலிஸ் உத்தியோகத்தர் கப்பகொட என சுகி அடையாளம் கண்டுள்ளார். (கிரிபத்கொட பகுதியில் பணிபுரிந்ததால் அவரை சுகி அறிந்திருந்தார்) அரு என்பவர் உள்ளார் என கப்புகொட வானில் உள்ள ஏனையவர்களிற்கு தெரிவித்துள்ளார். வான் சிறிது தூரம் சென்றதும் நின்றுள்ளதுஇ ஒரு குறிப்பிட்ட இடத்தில்இ வானில் இருந்த ஏனையவர்கள் இறங்கி சென்றுவிட்டனர் - சுகியுடன் அவருடைய பாதுகாப்பிற்கு ஒருவரை விட்டுச்சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர்  இளைஞர் ஒருவருடன் வந்துள்ளனர் அவர் கபிலஎன சுகி அடையாளம் கண்டார்.கபில கடத்தப்பட்டுள்ளார் என்பது சுகிக்கு புலனாகியது.

அதன்பின்னர்இருவரது கண்ணையும் கட்டியுள்ளனர் வாகனம் தொடர்ந்து பயணித்துள்ளது.

ஒரு கட்டத்தில் வான் நின்றவேளை இருவரையும் வெளியே இறக்கியுள்ளனர்இகட்டிடமொன்றிற்குள் அவர்களை கொண்டுசென்றுள்ளனர்இ அது வீடாகயிருக்கலாம் என சுகி நினைத்துள்ளார்இதொலைக்காட்சி சத்தம் அவருக்கு கேட்டுள்ளதுஇஅதன் பின்னர் அவர்களை அறைக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

தன்னை அந்த அறைக்குள் கொண்டு சென்றவேளை பலமுறை திருப்பினார்கள் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்த சுகி தாங்கள் கொண்டு செல்லப்படும் திசையை தாங்கள் அறியாமலிருப்பதற்காகவே தங்களை கடத்தியவர்கள் அவ்வாறு செய்தார்கள் என  குறிப்பிட்டார்.

அறைக்குள் கொண்டு செல்லப்பட்ட சுகி தனது நண்பன் கபிலவிற்கு என்ன நடந்தது என தெரியாத நிலையிலிருந்தார்இசுகியின் கைகளை கட்டிய அவர்கள் கால்களை சங்கிலியால் பிணைத்திருந்தனர்.

அவரை கடத்தியவர்கள் சுகியின் நண்பர்கள் எங்கே என கேள்விஎழுப்பினர்இகாலால் உதைத்தனர்அவர்களின் கேள்விகளிற்கு சுகி முழுமையான பதில்களை வழங்கவில்லை.அன்றிரவு பலர் அலறும் சத்தத்தை அவர் கேட்டார்.

என்னை மேலும் காயப்படுத்தாமல் என்னைகொலை செய்துவிடுங்கள் சேர் என ஒருவர் மன்றாடினார்.

அந்த இரவு சுகி உறங்கமுடியாத நிலையிலிருந்தார்.

மறுநாள் சிறுநீர் கழிப்பதற்கு தனக்கு அனுமதி தருமாறு தன்னை கடத்தியவர்களிடம் சுகி கேட்டார். அவர்கள் அவரது கண்ணை மறைத்திருந்ததுணியை அகற்றி கைகால் கட்டுகளை அகற்றி அவரை அந்தகட்டிடத்திற்குள் இருந்த கழிவறையொன்றிற்குள் கொண்டு சென்றனர்.

கழிவறைக்குள் சென்றதும் அங்கு காணப்பட்ட சிறிய சாளரம் ஊடாக அவர் வெளியில் பார்த்திருக்கின்றார்.தான் தடுத்துவைக்கப்பட்டுள்ள கட்டிடடம் ஒரு நிலத்தின் பின்பகுதியில் அமைந்திருப்பதை அவர் பார்த்திருக்கின்றார்இஅந்த நிலத்தின் பின்புற எல்லைஇரும்புவேலியால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

அந்த வேலிக்கு அப்பால் அவர் பல வீடுகளை பார்த்தார்ஜன்னல் ஊடாக தான் பார்த்தது பட்டலந்தகிராமத்தின்  வீடுகள் என்ற முடிவிற்கு அவர் வந்தார்.

அங்குஅவரது நண்பர்கள் பலர் வசித்ததால் இஅவர் அந்த பகுதிக்கு பலமுறை சென்றுள்ளார்

பட்டலந்த கிராமத்திற்கு அருகில் அரச உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் வீடமைப்பு திட்டம் உள்ளது  அங்கு பலரை தடுத்துவைத்து சித்திரவதை செய்கின்றனர்  என அவர் கேள்விப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக முதல்நாள் இரவு தன்னை பட்டலந்த வீடமைப்பு திட்டத்திற்கு கொண்டுவந்து தடுத்துவைத்துள்ளனர் என்ற முடிவிற்கு அவர் வந்தார்.

அடுத்த சில நாட்களில் தனக்கு என்ன நடந்தது என்பதை சுகி விபரித்தார். அவர்கள் அவரை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.அவ்வாறு தாக்கும்போது அவருடைய நண்பர்கள் குறித்து தீவிரவிசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.அவர்கள் கேள்வி எழுப்பிய விதத்தை பார்க்கும் போது நாசகார செயல்கள்தொடர்பிலேயே அந்த விசாரணை இடம்பெறுகின்றது என்பது அவருக்கு புலனாகியது.

தமிழில் - ரஜீபன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய குடிவரவு ‘ஒடுக்கு முறை’ சட்டங்களும்,...

2025-04-20 21:24:37
news-image

தமிழ்த் தேசியவாதத்தின் பெயரில் எதிர்காலத்தை உள்ளூராட்சி...

2025-04-20 17:29:55
news-image

என்.பி.பி.யின் கனவு பலிக்­குமா?

2025-04-20 15:53:10
news-image

ஈஸ்டர் தாக்­குதல் : வில­குமா மர்­மங்கள்?

2025-04-20 15:52:01
news-image

இந்­தி­யாவின் மூலோ­பாய மாற்றம்

2025-04-20 15:28:07
news-image

குறிவைக்கப்படும் ரணில்

2025-04-20 15:20:35
news-image

குடியேற்றவாசிகளை கூட்டாக விரட்டும் ட்ரம்பின் திட்டம்...

2025-04-20 14:42:19
news-image

1948 ஏப்ரலில் அரங்கேறிய டெயர் யாஸின்...

2025-04-20 14:20:30
news-image

பிள்ளையானின் கைது ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள்

2025-04-20 15:07:56
news-image

திரும்பிப் பார்க்க வேண்டிய தமிழரசு

2025-04-20 12:46:25
news-image

இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களும் ஈரானிய அமெரிக்க...

2025-04-20 11:57:32
news-image

சட்டவிரோத திஸ்ஸ விகாரை விவகாரம் ;...

2025-04-20 12:23:42