(எம்.நியூட்டன்)
திருக்கோணேச்சர திருத்தலத்தை தரிசிப்பதோடு ஆலய திருப்பணி வேலைகள் தொடர்பாக இந்திய அரசு அக்கறை எடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமருக்கு அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வர உள்ளா. அவரது விஜயத்தின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்கவேண்டும் எனவும் திருக்கோணேச்சர திருப்பணியில் இந்திய மத்திய அரசு அக்கறை கொள்ள வேண்டும்.
குறிப்பாக அந்நியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்ட திருக்கேதீச்சர தலத்தை இந்திய மத்திய அரசாங்கம் கடந்த காலத்தில் கருங்கல்லால் பாரிய சிற்பக்கோவிலாக மாற்றி அமைத்தது. அதற்கு இலங்கை வாழ் இந்துக்கள் என்றும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனர்.
திருக்கேதீச்சர திருத்தலம் போல் மிகத் தொன்மைவாய்ந்த திருக்கோணேச்சர திருத்தலமும் முக்கியத்துவம் பெறுகிறது. போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் இப்பெருங்கோவில் முற்றாக அழிக்கப்பட்டது.
தற்போது இவ்வாலயம் ஓர் சிறிய நிலப்பரப்பில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மீள்நிர்மாணம் பெற்றுள்ளது. முழுமையான கோவில் கட்டப்படவில்லை.
இந்திய அரசு இவ்வாலயத்தை முழுமையாக நிர்மாணித்து காப்பாற்ற வேண்டும் என இந்துமக்கள் சார்பில் நன்றியோடு வேண்டுகிறோம்.
தங்கள் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் திருக்கோணேச்சரத்துக்கு வருகைதந்து ஆலய நிர்வாக சபையுடனும் எம்மோடும் இவ்வாலய எதிர்காலம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
இந்திய தூதுவராலயம் தொடர்ந்து திருக்கோணேச்சர திருப்பணி தொடர்பான விபரங்களை ஆராய்ந்துள்ளார்கள். ஆலய நிர்வாக சபையை அழைத்து பேசியுள்ளார்கள்.
தாங்கள் இலங்கை பயணத்தில் இத்திருத்தலம் தொடர்பாக உரிய அக்கறை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM