முச்சக்கர வண்டியொன்றில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று (15) அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் நீராவிய பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, 101 கிராம் 20 மில்லி கிராம் நிறையுடய ஹெரோயின் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன், முச்சக்கர வண்டியும் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 41 வயதுடைய அநுராதபுரம், திசாவெவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM