அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை காணவில்லையா? ; ஜே.வி.பியிடம் மரிக்கார் எம்.பி கேள்வி

16 Mar, 2025 | 10:13 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

மக்கள் விடுதலை முன்னணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக இருளில் இருந்த பட்டலந்த அறிக்கையை அப்போது காணவில்லையா, என்று ஐக்கிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (15)   நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத்திட்டத்தின்   வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்    சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் சபைக்கு சமர்ப்பித்து, உணர்வுபூர்வமாக பேசினார்.  சபாநாயகரும்  கவலையடைந்தார். பட்டலந்த  சித்திரவதை முகாமின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட   வேண்டும் என்பதை நாங்களும் வலியுறுத்துகிறோம்.

1989 ஆம் ஆண்டு இந்த நாட்டில் பலர் கொல்லப்பட்டார்கள். அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டன இது  தொடர்பிலும் விசாரணை செய்யுங்கள். 

சபை  முதல்வர்   தனது உரையில் ' சுமார் 25 ஆண்டுகாலமாக இருளில் இருந்த அறிக்கையை தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக ' குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அமைச்சரவையில் மக்கள் விடுதலை முன்னணியின் நான்கு உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை வகித்தார்கள். 

அமைச்சரவை கூட்டத்துக்காக  ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் போது  இருளில் இருந்த அறிக்கையை காணவில்லையா, அறிக்கையை வெளிச்சத்துக்கு  கொண்டு வருமாறு அப்போது குறிப்பிட்டிருக்கலாமே,

அதேபோல்  2004 ஆம் ஆண்டு சுனாமி நிதியத்தை கொள்ளையடித்த ராஜபக்ஷர்களை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் விடுதலை முன்னணியினர் தான் முன்னிலையில் இருந்து செயற்பட்டார்கள். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அக்காலத்தில்  ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க  வேண்டும் என்று பாராளுமன்றத்தில் உரத்து உரையாற்றினார்.

மஹிந்தவின் ஆட்சியில் இருளில் இருந்த பட்டலந்த அறிக்கையை வெளியில் கொண்டுவர  சொல்லியிருக்கலாமே,  அதேபோல் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு  வழங்கினார்கள். அப்போது  பட்டலந்த அறிக்கை பற்றி பேசியிருக்கலாமே.

அனைத்து அரசாங்கங்களிலும் இவர்கள்  நேரடியாகவும், முறைமுகமாகவும்   செல்வாக்கு செலுத்தினார்கள். ஆனால் இந்த அறிக்கையை  வெளிக்கொண்டு வர முயற்சிக்கவில்லை.

தற்போது உணர்ச்சி வெளிப்பட பேசுகிறார்கள்.1980 ஆம் ஆண்டுகளுக்கு பிற்பட்ட காலத்தில் கொடிகாவத்தே  சந்தானந்த தேரர்,  விஜயகுமாரதுங்க,  ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை தொடர்பில்  விசாரணைகளை மேற்கொள்ள  வேண்டும்.

அக்காலப்பகுதியில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். நீதியை நிலைநாட்டுவதாயின் அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுங்கள்.

கலவரத்தின் போது ஒரு சந்தியில் ஒருவரை நிர்வாணமாக நிறுத்தி அவரை மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர் ஒருவர் எட்டி உதைப்பதை போன்ற புகைப்படம் இன்றும் பொது வலைத்தளங்களில் காணப்படுகிறது. ஆகவே  பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வல்வெட்டித்துறையில் டெங்கு பரக்கூடிய சூழலை...

2025-04-26 11:56:16
news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16