கிளி­நொச்சி விநா­ய­க­புரம் பகு­தியில் உள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்த சந்­தே­கத்தின்  பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்டிருந்த நான்கு பெண்­க­ளையும் எதிர்­வரும் 28ம்திகதி வரை விளக்க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கிளி­நொச்சி விநா­ய­க­பு­ரம் ­ப­கு­தியில் உள்ள வீடொன்றில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் தங்­கி­யி­ருந்த குற்­றச்­சாட்டில் விசேட குற்­றத்­த­டுப்­பு ­பொ­லி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நான்கு பெண்­களும் கடந்த 14ஆம் திகதி  கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் கிளி­

நொச்சி மாவட்ட நீதி­மன்ற பதில் நீதிவான்  எஸ்.சிவ­பா­ல­சுப்­பி­ர­ம­ணியம்  முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது  சந்­தே­க­நபர்­களால் பிணை விண்­ணப்பம் செய்­யப்­பட்­ட­போது பொலிஸார் மருத்­து­வ­ப­ரி­ சோ­தனை அறிக்கை கிடைக்­கப்­பெ­றா­மை யினால் பிணையில் செல்ல ஆட்சே­பனை தெரி­வித்­த­தை­ய­டுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கிளி நொச்சி மாவ  ட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.