சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு - யாழ்ப்பாணம் போட்டி

Published By: Vishnu

16 Mar, 2025 | 03:29 AM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் கொழும்பு அணிக்கும் யாழ்ப்பாணம் அணிக்கும் இடையிலான SLC தேசிய சுப்பர் லீக் 4 நாள் கிரிக்கெட் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது.

இந்தப் போட்டியில் கொழும்பு அணியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 454 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் யாழ்ப்பாணம் அணி  ஒரு விக்கெட்டை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஷெவன் டெனியல் 32 ஓட்டங்களுடனும் ரவிந்து ரசன்த 39 ஓட்டங்களுட னும்  ஆட்டம் இழக்காதுள்ளனர்.

இப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு மேலும் 381 ஓட்டங்கள் யாழ்ப்பாணம் அணிக்கு தேவைப்படுகிறது.

இந்த எண்ணிக்கையை கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (16) பெறுவது இலகுவான காரியமல்லாதபோதிலும் இலக்கை அடையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. 

அதேவேளை, கொழும்பு அணி எஞ்சிய 9 விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றி பெறவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

போட்டியின் மூன்றாம் நாளான சனிக்கிழமை (15) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 227  ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ்ப்பாணம் அணி சகல விக்கெட்களையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றது.

அஞ்சல பண்டார 88 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 51 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நிஷான் பீரிஸ் 59  ஓட்டங்களுக்கு  5 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய முதல் இன்னிங்ஸ் நிறைவில் 140 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த கொழும்பு அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது.

இதில் அவிஷ்க பெர்னாண்டோ 41 ஓட்டங்களையும் தனஞ்சய லக்ஷான் 75 ஓட்டங்களையும் கவின் பண்டார 57 ஓட்டங்களையும் துஷான் ஹேமன்த ஆட்டம் இழக்காமல் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேர்வின் அபினாஷ் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டசே 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிமேஷ் விமுக்தி 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஞாயிற்றுக்கிழமை (16) கடைசி நாள் ஆட்டம் தொடரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோஹ்லி, படிக்கல் அபார அரைச் சதங்கள்...

2025-04-21 01:05:03
news-image

சென்னை சுப்பர் கிங்ஸை துவம்சம் செய்தது...

2025-04-21 01:02:12
news-image

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு...

2025-04-21 00:58:52
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப்:...

2025-04-20 21:22:46
news-image

பாக் ஜலசந்தியை ஒற்றை காலுடன் நீந்திக்...

2025-04-19 17:38:51
news-image

ஆசிய றக்பி தரமுயர்வு போட்டியில் இலங்கை...

2025-04-19 14:05:33
news-image

18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர்...

2025-04-19 13:18:35
news-image

18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர்...

2025-04-19 01:03:53
news-image

பங்களாதேஷுக்கு எதிரான இளையோர் சர்வதேச ஒருநாள்...

2025-04-18 22:26:02
news-image

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற...

2025-04-18 01:22:12
news-image

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-18 01:18:14
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தனது சொந்த மண்ணில்...

2025-04-18 01:14:18