(நெவில் அன்தனி)
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் SLC தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் போட்டியில் கண்டி அணியை விட 265 ஓட்டங்களால் காலி அணி முன்னிலையில் இருக்கிறது.
எனினும் இந்தப் போட்டியில் முடிவு கிட்டும் என எதிர்பார்க்க முடியாது.
போட்டியின் மூன்றாம் நாளான சனிக்கிழமை (15) காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த கண்டி அணி சகல விக்கெட்களையும் இழந்து 350 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் நாள் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த காமில் மிஷார, இரண்டாம் நாளன்று மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 255 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகள் உட்பட 158 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இரண்டாவது விக்கெட்டில் லஹிரு உதாரவுடன் 61 ஓட்டங்களைப் பகிர்ந்த காமில் மிஷார, 3ஆவது விக்கெட்டில் நவனிது பெர்னாண்டோவுடன் 113 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சொஹான் டி லிவேராவுடன் 100 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
லஹிரு உதார 38 ஓட்டங்களையும் நுவனிது பெர்னாண்டோ 51 ஓட்டங்களையும் சொஹான் டி லிவேரா 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மிலன் ரட்நாயக்க 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
9 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்ட காலி அணி, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM