(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை (15) நடைபெற்ற சிட்னி ட்ரக் க்ளசிக் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றிய ருமேஷ் தரங்க, அருண தர்ஷன ஆகிய இருவரும் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்புக்கான அடைவு மட்டத்தை எட்டத் தவறினர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய ருமேஷ் தரங்க 77.86 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலாம் இடத்தைப் பெற்றார்.
ஆனால், பேர்த் ட்ரக் க்ளசிக் போட்டியில் ருமேஷ் தரங்க பதிவுசெய்த 85.41 மீற்றர் தூரத்தை விட இது மிகவும் குறைவாகும்.
சிட்னியில் மூன்றாவது முயற்சியிலேயே 77.86 மீற்றர் தூரத்தைப் ருமேஷ் தரங்க பதிவு செய்தார்.
முதல் முயற்சியில் 74.21 மீற்றர் தூரத்தையும் இரண்டாவது முயற்சியில் 68.10 மீற்றர் தூரத்தையும் ருமேஷ் பதிவுசெய்தார்.
அவரது நான்கு முயற்சி விதி மீறியதாக பதிவானது.
ஐந்தாம், ஆறாம் முயற்சிகளில் அவரால் 75.87 மீற்றர் தூரத்திற்கும் 76.51 மீற்றர் துரத்திற்குமே ஈட்டியை எறியக் கூடியதாக இருந்தது.
இதன் மூலம் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்புக்கான 85.50 மீற்றர் என்ற அடைவுமட்டத்தை அவர் இரண்டாவது தடவையாக எட்டத் தவறினார்.
இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குப்பற்றிய அருண தர்ஷன அப் போட்டியை 46.12 செகன்களில் நிறைவு செய்து 3ஆம் இடத்தைப் பெற்றார்.
அவரது அதிசிறந்த நேரப் பெறுதியான 44.99 செக்கன்களை விட இது மிக மோசமாக இருந்தது.
உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான அடைவு மட்டம் 44.85 செக்கன்களாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM