(நெவில் அன்தனி)
எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (15) நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென். தோமஸ் அணியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்ட றோயல் அணி 24ஆவது தடவையாக மஸ்டாங்ஸ் கிண்ணத்தை வென்றெடுத்தது.
ஹிருன் லியனஆராச்சி அபார சதம் குவித்து றோயல் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
நீலவர்ணங்களில் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சென். தோமஸ் அணியிடம் அடைந்த தோல்வியை இந்த வெற்றி மூலம் றோயல் அணி நிவர்த்திசெய்துகொண்டது.
மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென். தோமஸ் அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது.
ஜேடன் அமரவீர மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 70 ஓட்டங்களைப் பெற்றார்.
17 ஓட்டங்களைப் பெற்ற அவினாஷ் பெர்னாண்டோவுடன் முதலாவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜேடன் அமரவீர, தொடர்ந்து 32 ஓட்டங்களைப் பெற்ற சதேவ் சொய்ஸாவுடன் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களையும் 25 ஓட்டங்களைப் பெற்ற தினேத் குணவர்தனவுடன் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
ஆனால், கடைசி 8 விக்கெட்கள் 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன.
மத்திய வரிசையில் ரெஷோன் சொலமன்ஸ் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரமிரு பெரேரா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் காலித் ரஹிம்டீன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரனுக்க மலவிஆராச்சி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
221 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் அணி 46.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
றோயல் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் 2 விக்கெட்கள் 5 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
எனினும், மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆர். லியனஆராச்சி 127 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 105 ஓட்டங்களைக் குவித்து 6ஆவதாக ஆட்டம் இழந்தார்.
இதனிடையே விமத் தின்சாரவுடன் 3ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களையும் அனுஷ் பொலனோவிட்டவுடன் 5ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் லியனஆராச்சி பகிர்ந்தார்.
விமத் தின்சார 30 ஓட்டங்களையும் அனுஷ் பொலனோவிட்ட 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து தெவிந்து வேவல்வெல (23 ஆ.இ.), யசிந்து திசாநாயக்க (18 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 27 ஓட்டங்களைப் பகிர்ந்து றோயல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
பந்துவீச்சில் கவிந்து டயஸ் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா பிரதான அனுசரணை வழங்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM