(நெவில் அன்தனி)
விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை (15) முற்பகல் நடத்திய 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியான 10 கிலோ மீற்றர் நகர்வல ஓட்டப் போட்டியில் மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட மலையக வீரர் முத்துசாமி சிவராஜன் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரசாரா விஜேசூரிய தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
நுவரெலியா, சாந்திபுரம், ஒலிபன்ட் தோட்டத்தைச் சேர்ந்தவரும் பூண்டுலோயா டன்சினன் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான முத்துசாமி சிவராஜன், ஆண்களுக்கான 10 கிலோ மீற்றர் நகர்வல ஓட்டப் போட்டியை 34 நிமிடங்கள், 21 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கடந்த வருடம் முதலாம் இடத்தைப் பெற்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த சமன்த புஷ்பகுமார இம்முறை (34:57 நி.) வெள்ளிப் பதக்கத்தையும் அவரது அணியைச் சேர்ந்த தமித் ஹேமன்த குமார (34:59 நி.) வெண்கலப் பதக்கதையும் வென்றனர்.
இப் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட ஆர். யதீசன் (36:11 நி.) 8ஆம் இடத்தைப் பெற்றார்.
நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானது.
பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாண வீராங்கனை ரசாரா விஜேசூரிய போட்டி தூரத்தை 38 நிமிடங்கள், 41 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வத்சலா மதுஷானி ஹேரத் (40,04 நி.) வெள்ளிப் பதக்கத்தையும் இதே மாகாணத்தைச் சேர்ந்த சம்பிகா ஹேரத் (40:18 நி.) வெண்கலப் பதக்கதையும் வென்றெடுத்தனர்.
பெண்கள் பிரிவிலும் மத்திய மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றவர்களுக்கு தலா 50,000 ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்கு தலா 40,000 ரூபாவும் 3ஆம் இடத்தைப் பெற்றவர்களுக்கு தலா 30,000 ரூபாவும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டது.
அத்துடன் நான்காம் இடத்திலிருந்து பத்தாம் இடம்வரை பெற்ற 7 வீரர்களுக்கும் 7 வீராங்கனைகளுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நகர்வல ஓட்டப் போட்டிக்கு நெஸ்லே நெஸ்டமோல்ட் பூரண அனுசரணை வழங்கியது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் சுகத் திலக்கரட்ன, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ரெயா அட்மிரல் (ஓய்வுநிலை) ஷெமல் பெர்னாண்டோ, நெஸ்லே பிஎல்சி செயற்பாடுகள் மற்றும் அனுசரணைப் பிரிவு தலைமை அதிகாரி சஜீவ விக்ரமசிங்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM