(எம்.வை.எம்.சியாம்)
அம்பலாங்கொடை, இடம்தொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'சமன்கொல்லா' என்பவரினால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 'பொடி சுத்தா' என்பவர் உயிரிழந்திருந்ததுடன் இது தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இடம்தொட்ட பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல்களை வழங்கியமை தொடர்பில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இடம்தொட்ட பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (14) மாலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த இனந்தெரியாத இருவர் மூலம் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதுடன் இதன் போது 'பொடி சுத்தா' என அழைக்கப்படும் கிருசாந்த மென்டிஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
45 வயதுடைய 'பொடி சுத்தா' நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் கூலி வேலை செய்யும் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
'பொடி சுத்தா' என்பவர் எந்தவொரு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் அல்ல எனவும் அவர் சாதாரண வாழ்க்கை வாழும் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
'பொடி சுத்தா' குறித்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கும் ஒருவரென கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'சமன்கொல்லா' வினால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறித்த தரப்பினரால் கடந்த ஜனவரி மாதம் 'பொடி சுத்தா' மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்ய 5 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி அம்பலாங்கொடை இடம்தொட்ட பிரதேசத்தில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கியமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் 4 வயது பிள்ளையொன்று 'சமன் கொல்லாவின் தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM