இயக்குநர் - நகைச்சுவை நடிகர்- குணச்சித்திர நடிகர் - என பன்முக ஆளுமை கொண்ட நடிகர் சிங்கம் புலி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' என்ற நகைச்சுவை இணைய தொடர் ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜேஷ் சூசை ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செருப்புகள் ஜாக்கிரதை' என்ற நகைச்சுவை இணைய தொடரில் சிங்கம் புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் , இந்திரஜித் , மாப்ள கணேஷ், மனோஜ், கிரிஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி , பழனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எல் வி முத்து கணேஷ் இசையமைத்திருக்கிறார். இந்த இணையத் தொடரை ஜீ 5 டிஜிட்டல் தளத்திற்காக எஸ் எஸ் குரூப் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரித்திருக்கிறார்.
இணைய தொடரை பற்றி இயக்குநர் பேசுகையில், '' வைரங்களை கடத்தி விற்கும் தொழிலதிபர் ஒருவர்- தனது பொக்கிஷமான வைரத்தை தன்னுடைய காலணி ஒன்றில் மறைத்து வைக்கிறார். அதிகாரிகளின் அதிரடி சோதனைக்கு பயந்து அந்த காலணியை தன்னுடைய வரவு செலவு கணக்குகளை பராமரிக்கும் ஆடிட்டரிடம் ஒப்படைக்கிறார். ஆடிட்டரும், அவரது மகனும் காலணியை தொலைத்து விடுகிறார்கள். அந்த காலணியை தேடி தந்தையும், மகனும் மேற்கொள்ளும் கலகலப்பான பயணம் தான் இந்த இணைய தொடர். பல அத்தியாயங்களுடன் கூடிய இந்தத் தொடர் முழுவதும் கொமடியும், திருப்பங்களும் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த இணைய தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 28- ஆம் திகதியன்று ஜீ5 டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM