நடிகர் விமல் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இணைய தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் வெளியாகிறது.
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த 'ஓம் காளி ஜெய் காளி' எனும் இணைய தொடரில் விமல், கஞ்சா கருப்பு , விஜய் முருகன், இளங்கோ குமரவேல், ஜி. எம். குமார், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினம் எனும் ஊரில் நடைபெறும் தசரா திருவிழா பின்னணியில் பழிக்கு பழிவாங்கும் கதையுடன் இந்த இணைய தொடர் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.
இந்த தொடரில் கணேசன் எனும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக விமல் நடித்திருக்கிறார் என்பதும், இந்தக் கதை.. நாட்டுப்புற கதையையும், மக்களின் உணர்வையும் ஒன்றிணைக்கும் தசரா திருவிழாவின் பின்னணியில் விவரித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM