விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

15 Mar, 2025 | 04:56 PM
image

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விமல் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலை ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'பரமசிவன் ஃபாத்திமா' எனும் திரைப்படத்தில் விமல், சாயா தேவி,  எம். எஸ். பாஸ்கர், வீர சமர், மனோஜ் குமார், ஆதிரா, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். எளிய மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளையும், அரசியலையும் களமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் கார்வண்ணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்த தருணத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மதம் தொடர்பான உரையாடல்களும், காட்சிகளும் இடம்பிடித்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right