மாறிவரும் மாசடைந்த புற சூழல் காரணமாக பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் சுவாசப் பாதை வழியாக எளிதாக சென்று நுரையீரலை பாதிக்கிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக பெண்களை விட ஆண்கள் இத்தகைய பாக்டீரியா கிருமிகளால் நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பலவித சுகவீனங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இதனை தற்காத்துக் கொள்வதற்காக பிரத்யேக தடுப்பூசியை செலுத்திக் கொள்வது நலம் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பாக்டீரியாக்களும், வைரஸ் கிருமிகளும் எம்முடைய நுரையீரல் பகுதியை மட்டுமல்லாமல் உடலின் வெவ்வேறு உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாக மூளையை தாக்கக்கூடும். இதனால் இத்தகைய பாக்டீரியா பாதிப்பு மூளை பகுதியில் ஏற்பட்டால் அவர்களுக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.
இதன் காரணமாக அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களும் நியூமோகாக்கல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனை செலுத்திக் கொள்வதால் குறிப்பிட்ட பாக்டீரியா உங்கள் நுரையீரல் மற்றும் மூளை பகுதியை பாதித்தாலும் பாதிப்பின் தீவிரத்தை முறையான மற்றும் முழுமையான சிகிச்சை மூலம் குறைத்து நிவாரணம் பெறலாம் என்கிறார்கள்.
அதே தருணத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் என இருவரும் இத்தகைய தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். ஏனெனில் முதுமையின் காரணமாக எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைய தொடங்கும். மேலும் 64 வயதிற்குட்பட்டவர்களும் 19 வயதிற்கு மேற்பட்டவர்களில் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை அளவினை கொண்டவர்கள், புகை பிடிப்பவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள், நாட்பட்ட கல்லீரல் பாதிப்புள்ளவர்கள், சிறுநீரக பாதிப்புள்ளவர்கள், இதய பாதிப்புள்ளளவர்கள், புற்று நோயாளிகள் , உள்ளிட்ட அனைவரும் இத்தகைய நியூமோகாக்கல் தடுப்பூசியை வைத்தியர்களின் அறிவுரைப்படி உறுதியாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நிமோனியா காய்ச்சல் , மூளை காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் ரம்யா பிரசாத்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM