இன்றைய சூழலில் போட்டிகள் அதிகமாகி விட்டது. வாய்ப்புகள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நுகர்வோர் கலாச்சாரம் என்பது பரவலாக்கப்படவில்லை. இதன் காரணமாக தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி என்பது சதவீத அடிப்படையில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கிறது.
இதற்கு பல காரணங்களை கண்டறிந்தாலும் உங்களுடைய ஜாதகத்தில் நவ கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் ஜாதக ரீதியாகவும், கோட்சார ரீதியாகவும் தோஷம் பெற்றிருக்கும். இதனால் உங்கள் வளர்ச்சி வளர்ச்சிக்கு தடை ஏற்படும். உங்களுடைய முயற்சிக்கு உரிய பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இதனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இதற்கு ஒரு பிரத்யேக வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வலம் வர வேண்டும். இந்த தருணத்தில் நவ கிரகங்களுக்குரிய மந்திரங்களை குறிப்பாக எளிய முறையிலான மந்திரங்களை.. உதாரணத்திற்கு 'ஓம் சூர்யயாய நமக', 'ஓம் சந்திராய நமக', 'ஓம் புத பகவானாகிய நமக' எனும் நவகிரக மந்திரங்களை உச்சரித்து கொண்டே ஒன்பது முறை வலம் வர வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் மேற்கொள்ள வேண்டும். அதன் போது நவ கிரகங்களுக்கு சர்க்கரை பொங்கலை நிவேதனமாக படைக்க வேண்டும். ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக ஒன்பது முறை நவகிரகங்களை வலம் வந்து வழிபட்டால் நவகிரகங்களின் தோஷம் விலகி, இந்த பிறவியில் உங்களுக்கான சுப பலன்களை விரைவில் பெறலாம்.
அதே தருணத்தில் தொழில் சார்ந்த விடயங்களில் தாமதம் அல்லது தடை ஏற்படுவது நீடித்துக் கொண்டே இருந்தால் காலையில் எழுந்து நீராடி சூரிய பகவானை நமஸ்கரித்து வணங்கிட வேண்டும். அது பிறகும் சிறிய அளவிலான கருங்கல் ஒன்றினை எடுத்துக்கொண்டு, அதனை மற்றொரு பெரிய கல் மீது வைத்து, சுத்தியல் எனும் இரும்பாலான ஆயுதத்தின் மூலம் அந்த கருங்கல்லை உடைத்திட வேண்டும். இதனை ஒரே அடியில் உடைப்பது புத்திசாலித்தனம். இப்படி கருங்கல் உடைந்து விட்டால் உங்களுக்கு சூட்சமமாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகள் யாவும் உடைக்கப்பட்டு வெற்றிகள் சாத்தியமாகும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM