செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 20 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு !

Published By: Digital Desk 2

15 Mar, 2025 | 07:00 PM
image

உலகெங்கும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது வேலைவாய்ப்பை உருவாக்குமா அல்லது இருக்கும் வேலையைப் பறித்துவிடுமா என்ற விவாதம் தொடர்ந்து நீடிக்கிறது.

ஆனால், வேலையில் இருப்போர் அல்லது எதிர்காலத்தில் வேலை தேட உள்ளோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெய்ன் அண்ட் கம்பெனி (Bain & Company) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2027 ஆம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் AI துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் AI துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை 23 லட்சமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். AI துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும், இது தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல.

சர்வதேச அளவில் கடந்த 2019-லிருந்து ஆண்டுதோறும் AI தொடர்பான வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் வேகத்துக்கு ஏற்ப திறன்வாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததால் இந்த துறையில் இடைவெளி அதிகரித்து வருகிறது. அத்துடன் இது, உலகளவில்  AI தொழில்நுட்பத்துக்கு மாறும் வேகத்தை குறைக்க காரணமாக மாறியுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் AI பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஜெர்மனியில் 2027ம் ஆண்டுக்குள் AI பணியாளர்கள் 70 சதவீதம் பற்றாக்குறை ஏற்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தினால் இந்தியாவுக்கு கிடைத்த சாதகமான நிலை,

இந்த பற்றக்குறையினால், உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், திறமையான AI தொழிலாளர்களை உருவாக்குவதில் இந்தியா ஒரு முக்கியமான மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

Google, Microsoft, Amazon, Meta போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் AI துறை சார்ந்து அதிக முதலீடு செய்கின்றன. AI, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் போன்ற துறைகளில் இந்தியாவுக்குள் பெரிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. ஆனால், அதற்கேற்ற வகையில் இந்தியா AI திறனுடன் கூடிய தொழிலாளர்களை உருவாக்குவதை இன்னும் அதிகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

தற்போது, இந்தியாவில் AI சம்பந்தப்பட்ட திறன் கொண்ட தொழிலாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். தற்போது வேலையில் உள்ள பணியாளர்களை AI சம்பந்தப்பட்ட திறன்களுடன் உருவாக்குவது மிக அவசியமாக உள்ளது என்கிறார் பெய்ன் அண்ட் கம்பெனியின் இந்திய பிரிவு தலைவரான சைக்காத் பானர்ஜி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் பனிக்கடற்கரடிகளை பாதுகாக்க AI தொழில்நுட்பம்

2025-04-22 12:17:42
news-image

'புதிய நிறத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள் 

2025-04-21 11:19:45
news-image

ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண...

2025-04-15 09:32:38
news-image

ஜிப்லியால் சட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை...

2025-04-02 17:09:37
news-image

இந்தியாவில் 2 ஆயிரம் கிலோ மீற்றர்...

2025-03-31 12:39:07
news-image

எக்ஸ் தளத்தை விற்பனை செய்தார் எலான்...

2025-03-30 09:46:36
news-image

செயற்கை நுண்ணறிவால் பதற்றத்தை உணர முடியுமா...

2025-03-29 14:44:37
news-image

மறைந்துவிட்டதா சனியின் வளையங்கள்!?

2025-03-26 13:35:10
news-image

உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கக்கூடிய ஏர்போட்கள் ;...

2025-03-19 12:17:11
news-image

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 20...

2025-03-15 19:00:33
news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50