புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

15 Mar, 2025 | 12:08 PM
image

புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்  தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் சூரியவெளி - நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த இளைஞன் தேவாலயம் ஒன்றில் பணி செய்வதற்காக 28ஆம் திகதி கிளிநொச்சிக்கு சென்றுள்ள நிலையில்  கடந்த 12ஆம் திகதி மீண்டும் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இந்த இளைஞன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முய்ன்ற போது  எதிர்த்திசையில் பயணித்த பட்டா ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் இந்த இளைஞன் மாஞ்சோலை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48