(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் நான்கு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14) பகல் இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர் நேற்றைய தினம் பகல் 12.00 மணியளவில் தனது 3 நண்பர்களுடன் இணைந்து சின்னவத்தை பகுதியிலுள்ள வயல் பகுதிக்கு சென்று ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ளார்.
இதன்போது, நான்கு நண்பர்களுக்கிடையிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது 3 நண்பர்களும் இணைந்து உயிரிழந்த நபரை பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த வயல் பகுதிக்கு சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் அங்குச் சடலம் ஒன்று இருபத்தைக் கண்டு பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM