Haleon நிறுவனம் உலக வாய் சுகாதார தினம் 2025 நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் கூட்டாண்மை

Published By: Digital Desk 2

15 Mar, 2025 | 02:24 PM
image

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கிவரும்  முதலாவது பல்தேசிய மருந்து நிறுவனமான GlaxoSmithKline Healthcare என உத்தியோகபூர்வமாக அறியப்படும் பனடோல், அயோடெக்ஸ், ஈனோ போன்ற முன்னணி வர்த்தக நாமங்களின் தயாரிப்பாளரான Haleon Lanka நிறுவனம் இலங்கையில் நடைபெறவிருக்கும் உலக வாய் சுகாதார தினம் 2025 நிகழ்வுகளுக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இணைந்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் கைச்சாத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2025 பெப்ரவரி 28ஆம் திகதி நடைபெற்றது. தரமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வுக்கு வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் “மகிழ்ச்சியான வாய் மகிழ்ச்சியான மனம்” என்பதே இம்முறை உலகளாவிய தொனிப்பொருளாகும்.

உலக வாய் சுகாதார தினக் கொண்டாட்டத்தின் வழமையான முறைகளை மாற்றுவதே இலங்கை பல் மருத்துவ சங்கத்திற்கும், சென்சொடைன் தயாரிப்பாளர்களான Haleon நிறுவனத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும். “வாய் சுகாதாரத்திற்கு உணர்திறன் மிக்கவர்களாக இருங்கள்: முதலாவது அடியை எடுத்துவையுங்கள்” (#BeSensitive To Oral Health: Take the first step") என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக உலக வாய் சுகாதார தினத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கூட்டாண்மை அமைகின்றது.

மார்ச் மாதம் முழுவதிலும் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பிரசாரத்தின் ஊடாக இலங்கையர்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் கூடிய வாய்வழி சுகாதாரப் பராமரிப்புத் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்திகள் பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஊடாகக் கொண்டு சேர்க்கப்படவிருப்பதுடன், இது அனைவரும் தமது வாய்வழி சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும்.

நாடு முழுவதிலும் வாய்வழி சுகாதாரம் பற்றிய உறுதியான நன்மைகள் ஏற்படும் வகையில் இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை விரிவுபடுத்த Haleon நிறுவனமும்,  இலங்கை பல் மருத்துவ சங்கமும் இணைந்து பணியாற்றும். ஏறத்தாழ 50,000 இலங்கையர்கள் நன்மையடையும் வகையில் நாடு முழுவதிலும் இலவச பல் பரிசோதனை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

உலக வாய் சுகாதார தினமான மார்ச் 20ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள தேசிய நிகழ்வு இந்தப் பிரசாரத்தின் மையப்பகுதியாக அமையும். சிறந்த வாய்வழி சுகாதாரம் மற்றும் சரியான நடைமுறைகள் பற்றி மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இங்கு இலவச பல் பரிசோதனைகள், வாய்ப் புற்றுநோய் மதிப்பீடு மற்றும் பற்களின் உணர்திறன் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன. 

நாடு முழுவதிலும் உள்ள சமூகங்கள் மத்தியில் தரமான பல் பராமரிப்பு வசதி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலான இந்த முயற்சியில் இலங்கை பல் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த சகல உறுப்பினர்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளனர்.

சென்சொடைன் பற்பசை தயாரிப்பாளர்களான Haleon நிறுவனத்திற்கும், இலங்கை பல் மருத்துவ சங்கத்தினருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தக் கூட்டாண்மையானது அறிவூட்டல், விழிப்புணர்வு மற்றும் தடுப்புக்கான சேவைக்குரிய அணுகல் போன்றவற்றின் ஊடாக தரம்மிக்க வாய்வழி சுகாதாரத்தின் தரத்தை உயர்த்துவதில் கொண்டுள்ள  அர்ப்பணிப்பை பறைசாற்றுகின்றது. 

உணர்திறன் கொண்ட பற்களுக்கு நிவாரணம் வழங்கும் முன்னணி பற்பசையான சென்சொடைன் பற்பசையின் தயாரிப்பாளராக, Haleon நிறுவனம் உலகம் முழுவதும் பெயர்பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பானது வாய்வழி சுகாதாரம் பற்றிய அறிவூட்டல் மற்றும் அணுகல் தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. குறிப்பாக பல இலங்கையர்களைப் பாதிக்கும் பல் உணர்திறன் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உதவும்.

இலங்கையர்கள் வாய்வழி சுகாதாரத்தில் உணர்திறன் மிக்கவர்களாக இருப்பதையும், சிறந்த சுகாதார நடைமுறைகளுக்கான முதலாவது அடியை எடுத்து வைப்பதையும் சென்சொடைன் ஊக்குவிக்கின்றது.

படவிளக்கம்

இடமிருந்து வலம் : சதீஸ்காந்த் சிதம்பரம் (சிரேஸ்ட முகாமையாளர் – மருத்துவ சந்தைப்படுத்தல் Haleon Lanka), ஹர்ஷ ரத்னாயக்க (சந்தைப்படுத்தல் தலைவர் - Haleon Lanka), மஞ்சுள வீரக்கோன் (வணிகப் பிரிவின் தலைவர் – இலங்கை மற்றும் மாலைதீவு, Haleon Lanka), சானக வன்னியாராச்சி (முகாமைத்துவப் பணிப்பாளர் – இலங்கை மற்றும் மாலைதீவு, Haleon Lanka), பேராசிரியர் ருவன் ஜயசிங்க (தலைவர் – இலங்கை பல் மருத்துவ சங்கம்), டொக்டர் நிலந்த ரத்னாயக்க (கௌரவ உதவிச் செயலாளர் – இலங்கை பல் மருத்துவ சங்கம்), டொக்டர் பிரசாந்த அத்தபத்து (கௌரவ பொருளாளர் – இலங்கை பல் மருத்துவ சங்கம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் OPR முடிவு ; பொருளாதார...

2025-04-20 16:38:39
news-image

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆயுள், ஆண்டின்...

2025-04-19 13:08:39
news-image

Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக்கொண்ட Urology...

2025-04-17 12:16:50
news-image

'யூனியன் அஷ்யூரன்ஸ்'  சிறந்த பெறுமதியை வழங்கி...

2025-04-17 12:10:32
news-image

வலிமையான மற்றும் கண்களை கவரும் மெல்லிய...

2025-04-16 12:57:00
news-image

SLPL – இலங்கையின் முதல்ஃபிரான்சைஸ் அடிப்படையிலான...

2025-04-16 11:25:42
news-image

Cargills-SLIM-மக்கள் விருதுகள் 2025 விழாவில் 'ஆண்டின்...

2025-04-11 11:40:34
news-image

Prime Group இனால் அரச சேவை...

2025-04-11 12:07:11
news-image

SLT-MOBITEL புத்தாக்கதினம் 2024 ஊடாக ஊழியர்களுக்கான...

2025-04-11 12:14:29
news-image

2024 ஆம் ஆண்டின் வரிக்கு முந்திய...

2025-04-10 14:21:35
news-image

எல்.பீ. ஃபினான்ஸின் புதிய பரிவர்த்தனை அதிகாரியாக...

2025-04-10 11:48:59
news-image

SLT-MOBITEL - ரமழான் காலத்தை முன்னிட்டு...

2025-04-10 11:17:30