NDB Wealth அறிமுகப்படுத்தும் Xapp, முதலிடுவதற்கான திறன்மிக்க வழிமுறை

Published By: Digital Desk 2

15 Mar, 2025 | 11:20 AM
image

தனியார் துறையில் மிகப் பாரிய சொத்து முகாமைத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற NDB Wealth, 350 பில்லியன் சொத்துக்களை நிர்வகித்து வருவதுடன், தனிப்பட்ட முதலீட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு பிரபலமான நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் பெயர்பெற்று விளங்குகின்றது.

நிகழ்நேர அணுகல், மகத்தான அளவிலான கட்டுப்பாடு மற்றும் மேம்பட்ட நெகிழ்திறன் ஆகியவற்றுடன் முதலீட்டை நிர்வகிக்கும் வழிமுறைகளை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Xapp என்ற டிஜிட்டல் முதலீட்டுத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தின் அனுகூலத்தைக் கொண்டுள்ள Xapp ஆனது, இடைவிடாத மற்றும் திறன்மிக்க வழிமுறையில் முதலீடுகளை மேற்கொள்வதை உறுதி செய்வதுடன், முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்ற ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றையும் பேணி, பொதுமக்கள் மத்தியில் முதலீடுகளுக்கான வாய்ப்புக்களையும் மேம்படுத்துகின்றது.           

மிக நீண்ட காலமாக, உறவுமுறை முகாமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட, வலுவான உறவுமுறைகளின் மூலமாகவே NDB Wealth நிறுவனத்தில் செல்வத்தை முகாமைத்துவம் செய்யும் சேவைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

இந்த நம்பிக்கைக்குரிய அணுகுமுறையானது எமது சேவையின் மையமாக தொடர்ந்தும் காணப்படுவதுடன், தற்போது Xapp ன் துணையுடன், நிபுணத்துவ வழிகாட்டலுக்கு இணையாக, வலிமைமிக்க டிஜிட்டல் கருவியுடன் முதலீட்டாளர்களை மேலும் வலுப்படுத்தி, மேற்குறிப்பிட்ட உறவுமுறையை நாம் மேலும் மேம்படுத்தியுள்ளோம்.

இத்தளமானது நாம் வழங்கும் பிரபலமான செல்வ முகாமைத்துவ தீர்வுகளை இடைவிடாது ஒருங்கிணைப்பதுடன், வாடிக்கையாளர்கள் தாம் நம்பியுள்ள தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட உதவி வழிகாட்டலுக்கு எவ்விதமான சமரசமுமின்றி, தமது முதலீடுகளை மிகவும் திறன்மிக்க வழியில் கண்காணித்து, நிர்வகிக்கும் ஆற்றலை அவர்களுக்கு வழங்குகின்றது.   

பாரம்பரியமான சேமிப்புத் தெரிவுகளுக்கும் அப்பால், மகத்தான நெகிழ்திறன் மற்றும் பிரதிபலன்களை வழங்கும் முதலீட்டுத் தீர்வுகள் தொடர்பான விழிப்புணர்வு இலங்கை மக்கள் பலருக்கும் மட்டுப்படுத்த அளவிலேயே கிடைக்கப்பெறுகின்ற ஒரு பொதுவான சவாலுக்குத் தீர்வு காணும் நோக்குடன் Xapp அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிலையான வைப்புக்கள் மற்றும் பாரம்பரியமான சேமிப்புக் கணக்குகள் போன்றன மக்கள் மத்தியில் இன்னமும் பிரபலமான தெரிவுகளாக தொடர்ந்தும் காணப்படும் நிலையில், மேம்பட்ட நிதியியல் வளர்ச்சி வாய்ப்புக்களை வழங்கும் திறன்மிக்க மாற்றுவழிகள் குறித்து பலரும்  இன்னமும் முற்றாக அறியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

பாரம்பரியமான வங்கிச்சேவை வழிமுறைகளுக்கும் அப்பாற்சென்று, பொதுமக்களை பாரியளவில் எட்டும் வகையில் நவீன நிதியியல் கருவிகளை இலகுவாக அணுகும் வாய்ப்பினை இலங்கை மக்களுக்கு வழங்குவதில் NDB Wealth கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக Xapp ன் அறிமுகம் அமைந்துள்ளது.

இந்த செயலியை (app) நாட்டின் எந்தப்பகுதியிலிருந்தும்  மொபைல் தொலைபேசி மூலமாக பதிவிறக்கம் செய்து, கணக்கொன்றை ஆரம்பித்து, முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பிக்க முடியும். அரசாங்க பிணை முறிகளில் முதலீடுகளை மேற்கொள்கின்ற NDB Wealth ன் Money Fund தீர்வானது நிலையான முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் கூடிய பிரதிபலன்களைத் தருவதுடன், நிதியியல் வளர்ச்சிக்கு ஸ்திரமான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை ஏற்படுத்தி, எந்நேரமும் பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினையும் வழங்குகின்றது. Xapp ன் அனுகூலத்துடன், பாரம்பரியமான சேமிப்புக்களுடன் வழக்கமாகத் தொடர்புபட்டுள்ள முட்டுக்கட்டைகள் எதுவுமின்றி, இந்த மேம்பட்ட நிதியியல் வாய்ப்புக்களின் நன்மையை முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.                  

“அணுகக்கூடிய தன்மை மற்றும் திறன் ஆகியவற்றுடன் முதலீட்டாளர்களுக்கு வலுவூட்டுகின்ற நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் NDB Wealth எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது. Xapp ன் அறிமுகம் இந்த அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், இலங்கை மக்கள் அனைவரும் இடைவிடாத அணுகல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவலறிந்த நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றுடன் தமது முதலீடுகளை மகத்தான அளவில் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதை உறுதி செய்கின்றது,” என்று NDB Wealth ன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருவான் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்தார்.      

இத்தளமானது தேவையற்ற தாமதங்களைப் போக்குவதுடன், பயனர்களுக்கு சந்தையின் நகர்வுகள் குறித்த நிகழ்நேர தகவல் விபரங்கள் மற்றும் உடனுக்குடனான அறிவிப்புக்களுடன் தமது முதலீடுகள் தொடர்பில் முழுமையான அறிவையும், தெரிவு நிலையையும் வழங்குகின்றது.

தமது முதலீட்டுத் துறையின் பெறுபேற்றுத்திறன் குறித்து இடைவிடாது கண்காணித்து, மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை தன்னியக்கமயமாக்கி, தகவல் அறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஆழமான விபரங்கள் கொண்ட நிதியியல் நுண்ணறிவை முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். 

நிதியியல் முதலீடுகளின் துறையை கட்டியெழுப்பினாலும் சரி அல்லது சேமிப்புக்களை நெகிழ்திறன் மிக்க வழிமுறையில் அதிகரித்துக் கொள்ள எதிர்பார்ப்பவர்களானாலும் சரி, ரூபா 5,000 என்ற மிகச் சிறிய தொகையுடன் முதலீடுகளை ஆரம்பிப்பதற்கான அணுகலை Xapp உறுதிசெய்கின்றது. நிலையான தவணை வைப்புக்களைப் போல அல்லாது, நிதியை எந்நேரமும் அணுக முடிவதுடன், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் வழங்கி, அதன் விளக்கம் நிறைந்த தகவல் முகமானது சொத்துக்கள் மற்றும் பிரதிபலன்கள் குறித்த விரிவான மேலோட்டத்தை வழங்குகின்றது.       

சமீபத்தைய அறிமுகத்துடன், பாரம்பரியமான வங்கிச்சேவை மற்றும் நவீன முதலீட்டுத் தீர்வுகள் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பி, நிதியியல் புத்தாக்கத்தில் முன்னிலை வகிக்கும் சக்தியாக NDB Wealth தொடர்ந்தும் தன்னை நிலைநிறுத்தி வருகின்றது. App Store மற்றும் Google Play மூலமாக தற்போது Xapp ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மேலதிக தகவல் விபரங்களுக்கு 1360 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.        

NDB Wealth ஆனது நிதியியல் சேவைகள் மற்றும் வங்கிச்சேவை துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக மாறி, இலங்கையில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிதியியல் சேவைகள் நிறுவனங்கள் குழுமமாக மாற வேண்டும் என்ற மூலோபாய இலக்குடன் பயணித்து வருகின்ற National Development Bank PLC ன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமாகும்.

ஆரம்பம் முதற்கொண்டே, NDB Bank, NDB Capital Holdings Limited, NDB Investment Banking, NDB Wealth, NDB Securities, மற்றும் NDB Capital Bangladesh ஆகியவற்றை உள்ளடக்கிய இக்குழுமம், தேசத்தின் அபிவிருத்தியில் ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்து வருவதுடன், பொருளாதாரத்தின் அனைத்து நிலைமட்டங்களையும் சார்ந்த தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பலப்படுத்தி, வலுவூட்டி வருகின்றது. NDB குழும நிறுவனங்கள் அனைவற்றினதும் வாடிக்கையாளர்கள், NDB Bank மற்றும் அதன் இணை நிறுவனங்கள் வழங்கும் விரிவான தீர்வு மற்றும் சேவைகளின் பயன்களை அனுபவித்து வருகின்றனர்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் OPR முடிவு ; பொருளாதார...

2025-04-20 16:38:39
news-image

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆயுள், ஆண்டின்...

2025-04-19 13:08:39
news-image

Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக்கொண்ட Urology...

2025-04-17 12:16:50
news-image

'யூனியன் அஷ்யூரன்ஸ்'  சிறந்த பெறுமதியை வழங்கி...

2025-04-17 12:10:32
news-image

வலிமையான மற்றும் கண்களை கவரும் மெல்லிய...

2025-04-16 12:57:00
news-image

SLPL – இலங்கையின் முதல்ஃபிரான்சைஸ் அடிப்படையிலான...

2025-04-16 11:25:42
news-image

Cargills-SLIM-மக்கள் விருதுகள் 2025 விழாவில் 'ஆண்டின்...

2025-04-11 11:40:34
news-image

Prime Group இனால் அரச சேவை...

2025-04-11 12:07:11
news-image

SLT-MOBITEL புத்தாக்கதினம் 2024 ஊடாக ஊழியர்களுக்கான...

2025-04-11 12:14:29
news-image

2024 ஆம் ஆண்டின் வரிக்கு முந்திய...

2025-04-10 14:21:35
news-image

எல்.பீ. ஃபினான்ஸின் புதிய பரிவர்த்தனை அதிகாரியாக...

2025-04-10 11:48:59
news-image

SLT-MOBITEL - ரமழான் காலத்தை முன்னிட்டு...

2025-04-10 11:17:30