5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் சம்மாந்துறையில் கைது!

15 Mar, 2025 | 09:43 AM
image

5 வருடங்களாக அக்கரைப்பற்று பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (14) சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

அக்கரைப்பற்று பொலிஸாரினால் 2020 ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் திறந்த பிடியாணை மூலம் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடுவதாக சம்மாந்துறை பொலிஸ் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார். 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46