ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

15 Mar, 2025 | 09:34 AM
image

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு நடைபெற்ற இப்தார் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இஸ்லாமிய மதத் தலைவர்களும்  ஏராளமான முஸ்லிம்களும் இதில் கலந்து கொண்டதுடன்,  இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினார்.

செயிக் அப்துல்லா ஷஹீட் மௌலவி அவர்கள் “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.

சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 மணிக்கு நோன்பு துறக்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடைபெற்றது.

 அதனை அடுத்து இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஆளும் மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46
news-image

ஊழல் அரசியலில் ஈடுபட்டவர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளனர்...

2025-04-20 21:20:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் மயப்படுத்தி...

2025-04-20 20:54:36
news-image

யாழில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி...

2025-04-20 21:20:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியின்...

2025-04-20 18:30:01