(எம்.மனோசித்ரா)
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் மற்றும் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் படலந்த ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அத்தோடு அந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது குறித்து விசேட அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படலந்த வதை முகாம் மாத்திரமின்றி நாட்டில் இடம்பெற்ற ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM