மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் பலி

Published By: Vishnu

15 Mar, 2025 | 02:34 AM
image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த லொறி ஒன்று இன்று (14) காலை நாகலகமுவ பகுதியில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த வேளை வீதியின் இடது பக்கத்தில் நிறுத்தப்பட்டு லொறியை ஆய்வு செய்த போது, அதே திசையில் பயணித்த Freezer லொறியொன்று நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மோதி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. 

குறித்த விபத்தில் Freezer லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வீதியில் சென்ற மற்றொரு வாகனத்தின் சாரதி அவர்களுக்கு உதவவும் காயமடைந்த நோயாளிகளை அழைத்துச் செல்ல முன்வந்த போது, அதே திசையில் பயணித்த ஒரு கொள்கலன் லொறி மீண்டும் Freezer லொறி மீது மோதியது.

இதன்போது உதவிக்கு வந்த சாரதி, Freezer லொறியின் சாரதி, உதவியாளர் மற்றும் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட லொறியின் சாரதி ஆகியோரும் பலத்த காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து பூஸ்ஸ, வடுகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய Freezer லொறியின் சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

குறித்த விபத்தில் சிக்கிய வாகனங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் உப கட்டுப்பாட்டு நிலையத்தால் நாரம்மல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

சதலங்கல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கொள்கலன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர் !

2025-04-21 10:52:39
news-image

ஹட்டனில் லொறி விபத்து - மூவர்...

2025-04-21 10:27:27
news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின்...

2025-04-21 10:57:30
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43