(நெவில் அன்தனி)
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் கண்டி அணிக்கு எதிரான ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தேசிய சுப்பர் லீக் 4 நாள் கிரிக்கெட் போட்டியில் காலி அணி பலமான நிலையில் இருக்கிறது.
முதலாம் நாளான நேற்றைய தினம் நிப்புன் தனஞ்சய சதம் குவித்ததைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்றைய தினம் இலங்கை வீரர் ரமேஷ் மெண்டிஸ் சதம் குவித்து காலி அணியை மேலும் பலப்படுத்தினார்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 336 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த காலி அணி, 9 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டம் இழக்காமல் 135 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிப்புன் தனஞ்சய 2ஆம் நாள் காலை போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் 137 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
நிப்புன் தனஞ்சய, துனித் வெல்லாலகே (38), மிலன் ரட்நாயக்க (0), நிசல தாரக்க (13) ஆகிய நால்வரும் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரமேஷ் மெண்டிஸ், 10ஆம் இலக்க வீரர் டிலும் சுதீர ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 139 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
ரமேஷ் மெண்டிஸ் 122 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து டிலும் சுதீரவும் டில்ஷான் மதுஷன்கவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
டிலும் சுதீர 80 ஓட்டங்களுடனும் டில்ஷான் மதுஷன்க 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் சமிந்து விக்ரமசிங்க 90 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நுவனிது பெர்னாண்டோ 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்து பெர்னாண்டோ 121 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
லஹிரு உதார 36 ஓட்டங்களுடனும் காமில் மிஷார 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பெத்தும் நிஸ்ஸன்க 4 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
எண்ணிக்கை சுருக்கம்
காலி அணி 1ஆவது இன்: 602 - 9 விக். டிக்ளயார்ட் (நிப்புன் தனஞ்சய 137, ரமேஷ் மெண்டிஸ் 122, திலும் சுதீர 80 ஆ.இ., சதீர சமரவிக்ரம 78, ஓஷத் பெர்னாண்டோ 57, துனித் வெல்லாலகே 38, சமிந்து விக்ரமசிங்க 90 - 3 விக்., நுவனிது பெர்னாண்டோ 52 - 2 விக்., ரவிந்து பெர்னாண்டோ 121 - 2 விக்.)
கண்டி அணி 1ஆவது: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 52 - 1 விக். (லஹிரு உதார 36 ஆ.இ., காமில் மிஷார 10 ஆ.இ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM