உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சங்கு பூ

14 Mar, 2025 | 08:03 PM
image

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சங்கு பூ மிகவும் உதவுகிறது.

சங்கு பூ ஏனைய மலர்களைப் போன்று அதிக நறுமணம் கொண்டது அல்ல. ஆனால் இந்த பூவில் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளன.

உடலில் உள்ள சகல நோய்களையும் தீர்ப்பதற்கு இந்த சங்கு பூ பயன்படுத்தப்படுகிறது.

சங்கு பூவில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. 

சங்கு பூ உடலின் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த பூவை இருமல், காய்ச்சல் மற்றும் சளி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

சங்கு பூவில் தேநீர் செய்து தினமும் குடித்து வருவதால் உடல் எடை குறைவடையும், சரும பிரச்சினைகள் தீரும், முடி வளர்ச்சியடையும், கண்பார்வை, நுரையீரல், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

உடல் வெப்பத்தைத் தணிப்பதற்கும் இந்த சங்கு பூ பயன்படுத்தப்படுகிறது.

சங்குப் பூக்கள் புற்றுநோயை தீர்ப்பதற்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. 

இந்த பூக்கள்  மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றை போக்கவும் உதவுகின்றன.

சங்கு பூவின் வேர் மற்றும் இலைகளிலும் அதிகளவு நன்மைகள் உள்ளன.

எனவே, சங்கு பூ மற்றும் அதன் இலையை தண்ணீரில் இட்டு சிறிது இஞ்சி சேர்த்து பருகினால் உடலுக்கு மிகவும் நல்லது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right