நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

14 Mar, 2025 | 06:48 PM
image

எம்மில் சிலருக்கு திடீரென்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். வேறு சிலருக்கு சளி அல்லாத வறட்டு இருமல் தொல்லை தொடர்ந்து ஏற்படக்கூடும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கு நிமோனிடிஸ் எனப்படும் நுரையீரல் திசு வீக்க பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.‌

நிமோனிடிஸ் எனும் பாதிப்பு நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கம் அல்லது எரிச்சலை குறிக்கிறது. நுரையீரலில் ஏற்படும் தொற்றுகள் காரணமாகவும் இத்தகைய நுரையீரல் திசுக்கள் வீக்கமடைய கூடும். அதே தருணத்தில் தொற்று நோயால் ஏற்படாத நுரையீரல் திசு வீக்கத்தை தான் நிமோனிடிஸ் என குறிப்பிடுகிறார்கள்.

சுவாசிப்பதில் அசௌகரியம்,  சளியற்ற வறட்டு இருமல், அதீத சோர்வு , பசியின்மை, காய்ச்சல், மூட்டு மற்றும் தசை வலி, தலைவலி, எடை இழப்பு ... போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

உங்களுடைய நுரையீரல் பகுதியில் உள்ள அல்வியோலி எனப்படும் சிறிய காற்று பைகளில் எரிச்சல் ஊட்டும் பொருள் ஊடுருவி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரல் திசுக்கள் அல்வியோலி வழியாக குருதி ஓட்டத்தில் ஓக்சிஜன் சீராக பயணிப்பதை தடை செய்கிறது.

நிமோனிடிஸ் ஹைப்பர்சென்சிடிவிட்டி நிமோனிடிஸ் என்றும், ரேடியேஷன் நிமோனிடிஸ் என்றும் வகைப்படுத்துவார்கள். இதில் உங்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சையை தீர்மானிப்பார்கள்.

பறவையின் இறகுகள், எச்சங்கள், தூசி, ரசாயனங்கள், விலங்குகளின் ரோமம் என பல்வேறு காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டதன் பக்க விளைவாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிந்து முறையாக மற்றும் முழுமையான சிகிச்சையை பெற வேண்டும். புறக்கணித்தாலோ அலட்சியப்படுத்தினாலோ நுரையீரல் பாதிப்பு அதிகமாகி உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் குருதி பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், நுரையீரல் இயங்கு திறன் பரிசோதனை, நுரையீரல் திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரதியேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் வழங்குவர். சிலருக்கு ஓக்சிஜன் தெரபி, நுரையீரல் மறு சுழற்சி மற்றும் புத்தாக்க சிகிச்சை ஆகிய சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிப்பர். மிகச் சிலருக்கே பாதிப்பின் தீவிர தன்மையை துல்லியமாக அவதானித்து நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வர்.

- வைத்தியர் சபரி நாத்

தொகுப்பு : அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்துங்கள்…!

2025-04-21 13:10:31
news-image

மண்ணீரல் நரம்பு மறு சீரமைப்பு சிகிச்சை

2025-04-19 17:32:59
news-image

நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுகள்

2025-04-19 15:47:07
news-image

பெரியனல் அப்ஸெஸ் : ஆசனவாயில் ஏற்படும்...

2025-04-18 18:33:58
news-image

பூஞ்சைகளை நுகர்வதால் ஆரோக்கியம் கெடலாம்

2025-04-18 17:44:44
news-image

தர்பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்திருக்கா?

2025-04-18 12:47:04
news-image

ஹைப்பர்ஸ்ப்ளெனிசம் எனும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்பை...

2025-04-18 10:51:51
news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-18 12:52:24
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45
news-image

வெறும் 10 நாட்கள் போதும்… வித்தியாசத்தை...

2025-04-16 16:00:35
news-image

பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

2025-04-16 15:34:29
news-image

சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கோணப்...

2025-04-16 12:55:52