(நெவில் அன்தனி)
கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீராங்கனை மல்கி மதாராவின் அற்புதமான பந்துவீச்சின் உதவியுடன் பலம்வாய்ந்த நியூஸிலாந்தை 7 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டது.
நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 0 - 2 என தோல்வி அடைந்த இலங்கைக்கு இந்த வெற்றி பெரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தனது முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மல்கி மதாரா, எதிரணித் தலைவி சுசி பேட்ஸ், அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற எம்மா மெக்லியோட் உட்பட 3 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் எம்மா மெக்லியோட் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் துடுப்பெடுத்தாடி 46 பந்துகளை எதிர்கொண்டு 44 ஓட்டங்களைப் பெற்றார். சுசி பேட்ஸ் 21 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் ஜெசி கேர் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.
பந்துவீச்சில் மல்கி மதாரா 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோஷி ப்ரியதர்ஷனி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
102 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 14.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆரம்பத்திலேயே அதிரடியில் இறங்கிய சமரி அத்தபத்து, முதலாவது விக்கெட்டில் விஷ்மி குணரட்னவுடன் 37 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆனால், விஷ்மி குணரட்ன 7 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
அவரைத் தொடர்ந்து ஹர்ஷித்தா சமரவிக்ரம (2), கவிஷா டில்ஹாரி (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (66 - 3 விக்.)
அதன் பின்னர் சமரி அத்தபத்து, நிலக்ஷிகா சில்வா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.
சமரி அத்தபத்து 48 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 64 ஓட்டங்களுடனும் நிலக்ஷிகா சில்வா 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ரோஸ்மேரி மயர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகி: மல்கி மதாரா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM