சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக இன்னிசையும், உதவியும்

14 Mar, 2025 | 05:23 PM
image

யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் நிகழ்வில் நுண்கலைமானி கிமாலினி சுகந்தன் அவர்களின் தெய்வீக இன்னிசைக்கானம் இடம்பெற்றது. 

இதில் ஹார்மோனிய இசையினை  இசைக்கலாமணி நடேசு செல்வச்சந்திரன், மிருதங்க இசையினை  கலாவித்தகர் க.சிவகுமார் தபேலா இசையினை வித்துவான் ப.கபிலன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இதேவேளை, உதவியாக கோப்பாய் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, கட்டிட கட்டுமானப் பணிக்காக ரூபா 75,000 ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இதேவேளை, சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாதாந்தம் இடம்பெறும் திருவாசக முற்போதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (14)  சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் பல ஓதுவார்களுடன் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22