சமூக வலைத்தளங்கள் ஊடாக பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், சமூக வலைத்தங்களில் குறித்த விடயங்களை உருவாக்கியவர்கள் மற்றும் ஊக்குவித்த குழுக்கள் தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.