(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள அடுத்த தவணை கடன் பயன்படுத்தப்படாது. நாணய நிதியத்தின் செயற்திட்டங்கள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்படுமென நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியபெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
2024.01.01 ஆம் திகதி முதல் 2024.09.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமிலுந்து இலங்கை 336 மில்லியன் டொலர் கடன் தொகையை பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் 2024.09.21 ஆம் திகதி முதன் இன்றளவில் நாணய நிதியத்திடமிருந்து 334 மில்லியன் டொலர்கள் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
2024.09.21 ஆம் திகதி முதல் இன்றளவில் நாணய நிதியத்திடமிருந்து ஒரு தவணை அடிப்படையில' கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரவு,செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த கடன் தொகை பயன்டுத்தப்பட்டது.
3.743 சதவீதம் என்ற அடிப்படையில் கடன்தொகைக்கான வட்டி விகிதம் அறவிடப்படுகிறது.2028 மற்றும் 2034 ஆகி ய காலப்பகுதிகளில் கடன்தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள அடுத்த தவணை கடன் பயன்படுத்தப்படாது. நாணய நிதியத்தின் செயற்திட்டங்கள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM