பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேல் பாலியல் வன்முறையை பயன்படுத்துகின்றது - ஐநா

Published By: Rajeeban

14 Mar, 2025 | 01:56 PM
image

காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது.

காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன  பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காசா மருத்துவமனைகளில் மகப்போறு வோர்ட்கள் மற்றும் பெண்களிற்கு சுகாதார சேவைகளை வழங்கும் ஏனைய நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து விரிவான விபரங்களை அந்த அறிக்கையில் காணமுடிகின்றது.

ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் அழிக்கப்பட்டமை காசாவிற்குள் மருந்துகள் உணவுபொருட்கள் நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டமை  காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் இனப்பெருக்க திறனை ஒரு பகுதியாக அழித்துவிட்டது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ரோம் சட்டம் மற்றும் இனப்படுகொலைசமவாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் இரண்டுவகையான இனப்படுகொலைகளாகும்.ஒன்று பாலஸ்தீனியர்களை உடல்ரீதியாக அழிப்பதற்கு திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை முறை வேண்டுமென்றே திட்டமிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துதல் மற்றையது பிறப்பை தடுப்பதற்காக திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என மனித உரிமை பேரவை  தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் பொது இடங்களில் நிர்ப்பந்தப்படுத்தி ஆடைகளை களைதல் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்முறை அச்சுறுத்தல் ,உட்பட சிலவகையான பாலியல் மற்றும் பாலினஅடிப்படையிலான வன்முறைகளை தங்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர் என ஐநாவின்அறிக்கை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அடிப்படையிலான சித்திரவதைகள்போன்ற இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் பாலியல்வன்முறையின் வடிவங்களை  பயன்படுத்துகின்றது இது யுத்த குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு சமனாது என ஐநா தெரிவித்தள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான குற்றங்களின் பரவல் மற்றும் தீவிரம் பாலஸ்தீன மக்களை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் ஒடுக்கவும்அழிக்கவும் இஸ்ரேல் அதிகளவில் பாலியல் வன்முறையை  ஒரு போர் வடிவமாக பயன்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவத்தலைமை பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு வெளிப்படையான உத்தரவுகளை அல்லது மறைமுகமான ஊக்கத்தை வழங்கியுள்ளது என ஐநாவின் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31
news-image

உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’...

2025-04-18 15:24:04
news-image

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்குவது...

2025-04-18 14:42:36
news-image

நடுவானில் கடத்தப்பட்ட விமானம் - பயணியின்...

2025-04-18 12:21:08
news-image

புளோரிடா பல்கலைகழகத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவம் -...

2025-04-18 11:01:33