பட்டலந்த வீடமைப்பு திட்டத்தின் வீடுகளை களனிபொலிஸின் நாசகாரவேலை எதிர்ப்பு பிரிவினர் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியது யார்? ஆணைக்குழு அறிக்கை தெரிவிப்பது என்ன?

Published By: Rajeeban

14 Mar, 2025 | 12:22 PM
image

யார் காரணம்?

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் பொலிஸார் எவ்வாறன சூழ்நிலையில் வசிக்க தொடங்கினார்கள் என்பதை நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ளோம்.

இந்த செயற்பாட்டின் போது பொலிஸார் தங்களிற்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை எப்படி சென்றடைய முடிந்தது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்தது என ஆராயப்பட்டது.

ஆணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் களனிபொலிஸின் நாசகார  வேலை எதிர்ப்பு பிரிவினர் குறிப்பிட்ட வீடுகளில் வசிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

வீடுகளை வாங்குவதற்கான நடைமுறை குறித்து பொலிஸ் திணைக்களத்திற்கு தெரிந்திருக்கவில்லை என்பதும்  ஆணைக்குழுவின்  முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட பொலிஸாருக்கு பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் வீடுகளை ஒதுக்குவது தொடர்பில்  உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அரசாங்க உர உற்பத்தி கூட்டுத்தாபனத்தை கலைப்பதற்காக நியமிக்கப்பட்டவரே களனிபொலிஸ் பிரிவின் நாச வேலை எதிர்ப்பு பிரிவினருக்க இந்த வீடுகளை ஒதுக்கியுள்ளார்.அவருக்கு இதற்கான உத்தரவை வழங்கியவர்  அவ்வேளை அமைச்சராகயிருந்த ரணில்விக்கிரமசிங்க

அரசாங்க உர உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கான அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே ரணில்விக்கிரமசிங்க இந்த வீடுகளை பொலிஸாருக்கு கையளிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார்.

பொலிஸாருக்கு தேவைப்பட்டதை விட அதிகளவு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதை ஆணைக்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் புலப்படுத்தியுள்ளன.

சில சந்தர்ப்பங்களில் இந்த வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்ட பொலிஸார் அந்த வீடுகளில் வசிக்கவில்லை.

மேலும் இந்த வீடுகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை,அந்த வீடுகள் சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படாமலிருப்பதை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் சில சந்தர்ப்பங்களில் பொலிஸார் தங்களிற்கு வழங்கப்படாத வீடுகளை கூட பயன்படுத்தியுள்ளனர்.சில வீடுகளை அவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி அனுமதி வழங்கப்படாத போதிலும் பயன்படுத்தியுள்ளனர்.

பொலிஸார் குறிப்பாக களனிபொலிஸின் நாசகாரவேலை எதிர்ப்பு பிரிவினர் இவ்வாறான சூழ்நிலையிலேயே பட்டலந்த வீடமைப்பு திட்டத்தினை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

சில சந்தர்ப்பங்களில் நபர்கள் கடத்தப்பட்டு இந்த வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்பதை நாங்கள் சுருக்கமாக மேலே குறிப்பிட்டுள்ளோம்.

பெரும்பாலான வழக்குகளில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதைசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீடுகள் சட்டவிரோத தடுப்பிற்காகவும்,வதைமுகாம்களாகவும் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் இந்த அறிக்கை பதிவு செய்யவில்லை.

கடத்தல், சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் நபர்களை சித்திரவதை செய்தல் குறித்து சாட்சியமளித்தவர்கள்  தெரிவித்த குற்றச்சாட்டுகளின் உண்மைநிலையை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆணைக்குழு சாட்சிகளாக அழைத்திருந்தது.

இந்த விடயத்தில் அதிகளவு பேசப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் டக்ளஸ் பீரிசினை எம்முன்னிலையில் ஆஜராக செய்ய முடியவில்லை என்பதை குறிப்பிடவேண்டும்.

நாங்கள் அவரை எங்கள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு  அழைப்பு விடுத்தவேளை அவர் இலங்கையிலிருந்து இரகசியமாக தப்பிச்சென்றிருந்தார்.

எனினும் அவ்வேளை களனி பொலிஸின் நாசகார எதிர்ப்பு பிரிவுடன் தொடர்புபட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் ஆணைக்குழு முன்னிலையில் எம்மால் அழைக்க முடிந்தது.

அவர்கள் அனைவரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் தங்களிற்கு தொடர்புள்ளதை மறுத்தனர்.

அவர்கள் அதனை மறுப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம்.

 

மேலே குறிப்பிடப்பட்ட சாட்சியங்களும்,சட்டவிரோத தடுப்பு முகாம்கள் வதைமுகாம்கள் குறித்து சாட்சியமளித்தவர்களும் ஏன் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவேண்டும் என்பதற்கான விசேடமாக காரணங்களை களனி பொலிஸின் நாசகார எதிர்ப்பு பிரிவுடன் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் தெரிவிக்க முடியவில்லை.

எனினும் அரச உர உற்பத்தி கூட்டுத்தாபனம் வழங்கிய பொருட்களின் அடிப்படையில் களனி பொலிஸின் நாசகார எதிர்ப்பு பிரிவுடன் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் தாங்கள் வசித்ததை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அல்லது அவ்வேளை களனி பொலிஸின் நாசகார எதிர்ப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ரஞ்சித் விக்கிரமசிங்க  வழங்கிய உத்தரவின் பேரிலேயே அங்கு பட்டலந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் வசித்ததாக தெரிவித்தனர்.

அவர்களிற்காக அந்த வீடுகளை பெற்றுக்கொடுத்தவர் டக்ளஸ் பீரிஸ் என்பது அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.

அந்த வீடுகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு களனி பொலிஸின் நாசகார எதிர்ப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ரஞ்சித் விக்கிரமசிங்கவிற்கு டக்ளஸ் பீரிஸ் உத்தரவிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்