உலக ஈரநில தினம் பெப்ரவரி 2ஆம் திகதி உலகம் முழுவதிலும் அனுடிக்கப்பட்டது. ஈரநிலங்கள் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினம் இதுவாகும்.
இத் தினத்தை முன்னிட்டு எல்.பீ. ஃபினான்ஸ் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கொழும்புப் பிராந்தியப் பிரிவும் ஒருங்கிணைந்து விசேட நிகழ்ச்சி ஒன்றை அத்திடியவிலுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடத்தின.
பல்வகை உயிரினத் தன்மைக்கு ஆதரவளித்தல், நீர் அமைப்புகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் மற்றும் காலநிலைமாற்றத்தின் தாக்கங்களிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் தொடர்பில் ஈரநிலங்கள் வகிக்கும் முக்கியமான பங்கினை எடுத்துக்காட்டுவதே இந்த வருட உலக ஈரநிலதினத்தின் தொனிப்பொருளாகும்.
அத்திடியவில் இடம்பெற்ற நடவடிக்கைகள் மரநடுகைத் திட்டம் ஒன்றுடன் ஆரம்பமானது. ஆர்வமுள்ள உள்ளுர் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் தொண்டர்களும் ஒருங்கிணைந்து அத்திடிய வனஜீவராசிகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ளகாணியில் நம் நாட்டுக்குரிய மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.
ஈரநிலங்களில் வாழும் தனித்துவமானஉயிரினங்கள் பற்றியும் அவற்றால் சுற்றாடலுக்குக் கிடைக்கும் சேவைகள் பற்றியும் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காகவே இக் காட்சிசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்சியில் பங்குபற்ற வந்திருந்தவர்களின் நன்மைக்காக அறிவூட்டல் விரிவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
வனஜீவராசிகள் பாதுகாப்பு நிபுணர்களான சமனலியனகம,பேராசிரியர் நிஹால் தயாவன்ச ஆகியோர் இந்த விரிவுரைகளை நிகழ்த்தினர். பல்வகை உயிரின சூழலைப் பேணுதல், நீர்நிலைகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு உதவுதல் என்பவற்றின் முக்கியத்துவத்தை நிபுணர்கள் எடுத்துக்கூறினர்.
எல்.பீ. ஃபினான்ஸ் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கூட்டு முயற்சியாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் வியாபார நிறுவனங்கள்,அரசாங்க நிறுவனங்கள் மற்றும் உள்ர் சமூகத்தினரின் ஒத்துழைப்பு எவ்வளவு வலிமையானது என்பதை எடுத்துக்காட்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM