பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்புக்கு தீர்வு வழங்குமாறு கோரி; இன்று நள்ளிரவு முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு

Published By: Vishnu

14 Mar, 2025 | 03:34 AM
image

பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (14) நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமை இரவு நேரங்களில் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் உயிரிழப்பு தொடர்பான அனைத்து பணியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளதுடன், அரச பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் வியாழக்கிழமை (13) கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.

பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூடுதல், ஒருவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட இடத்திலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது மற்றும் மதியம் 1 மணி வரை மாத்திரம் கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலகத்தில் தங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, கிராம உத்தியோகத்தர் சங்கம் மேற்படி பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கான உடனடி தீர்வுகளைப் பெறும் நோக்குடன் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளமையால், எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துக் கொள்ள தயாராக உள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47