(இராஜதுரை ஹஷான்)
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவதை போன்று அரசாங்கம் விஜயகுமாரதுங்க, ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை தொடர்பான அறிக்கைகளையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். யார் படுகொலையாளிகள் என்பதை மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல் தயார்படுத்தல் பணிகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம். பொதுஜன பெரமுனவுக்கான கேள்வி அதிகளவில் காணப்படுகிறது. கடினமான நிலையில் தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்துக்கு செல்வதில் எவ்வித பாதிப்பும் கிடையாது,. நாங்கள் கிராமத்துக்கு செல்ல முடியாது என்று குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி தான் இன்று கிராமத்துக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பட்டலந்த விவகாரம் தொடர்பில் நாங்களும் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அதேபோன்று விஜேகுமாரதுங்க, ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளையும் அரசாங்கம் வெளியிட வேண்டும்.அப்போது யார் மனித படுகொலையாளர்கள் என்பதை மக்கள் அறிந்துக்கொள்வார்கள். உண்மையை மக்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை அபிவிருத்தி செய்தார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே ஆட்சிக்கு வந்தது.இறுதியில் நாடு தேசிய பாதுகாப்பில் பலவீனமடைந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் கடந்த அரசாங்கங்கள் மீதும் மக்கள் மத்தியில் வெறுப்பினை விதைத்தே ஆட்சிக்கு வந்தார். மக்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதிகள் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM