இலங்கையில் பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கவும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்கவும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கை அங்கீகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.
இந்த மாநாட்டை உடன்டிக்கையை இலங்கை இன்னும் அங்கீகரிக்கவில்லையென்றாலும், இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து அது தொடர்பான சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .
நாங்கள் இதை ஒரு சட்டமாக அறிமுகப்படுத்தி, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம், மேலும் பெண்கள் எதிர்கொள்ளும் மன அல்லது உடல் ரீதியான அனைத்து வகையான துஷ்பிரயோகங்களையும் தடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM