அடுத்த வாரம் இறுதியான தீர்மானத்தை அறிவிப்போம் - திஸ்ஸ அத்தநாயக்க

Published By: Vishnu

14 Mar, 2025 | 02:12 AM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட ஏனைய மாநகரசபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை 19 அல்லது 20ஆம் திகதி அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அடுத்த வாரம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தேசிய வேட்புமனு தயாரித்தல் குழு கூடவுள்ளதாகவும், அதன் பின்னரே வேட்புமனு தாக்கல் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தயார்நிலைகள் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற அமர்வுகளுக்கு மத்தியிலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம். கடந்த தேர்தல்களைப் போல அன்றி இம்முறை தேர்தலில் சிறந்த வெற்றியை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். அதுவே எமது வெற்றிக்கு ஏதுவான காரணியாக அமையும்.

ஐக்கிய தேசிய கட்சியுடனான இணைவு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக நான் அதிலிருந்து விலகிவிட்டேன். எனவே அது தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது. எனினும் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதற்கான வாய்ப்பு இனி ஏற்படுமா என்பதை தற்போது கூற முடியாது என்றார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை கொழும்பில் 3 உள்ளூராட்சிமன்றங்களுக்காகவும், கம்பஹாவில் 3 உள்ளூராட்சிமன்றங்களுக்காகவும், களுத்துறையில் 6 உள்ளூராட்சிமன்றங்களுக்காகவும், கண்டியில் 7 உள்ளுராட்சிமன்றங்களுக்காகவும், மாத்தளையில் 2 உள்ளுராட்சிமன்றங்களுக்காகவும், நுவரெலியாவில் ஒரு 3 உள் ளூராட்சிமன்றத்துக்காகவும், காலியில் 6  உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும், மாத்தறையில் 10 உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மேலும் அம்பாந்தோட்டையில் 2 உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும், யாழ்ப்பாணத்தில் 7 உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும், வவுனியாவில் 5 உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும், மட்டக்களப்பில் 9 உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும், அம்பாறையில் 14 உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும், குருணாகலில் 7 உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும், புத்தளத்தில் 1 உள் ளூராட்சிமன்றத்துக்காகவும், பொலன்னறுவையில் 1 உள் ளூராட்சிமன்றத்துக்காகவும், பதுளையில் 6 உள் ளூராட்சிமன்றங்களுக்காகவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11
news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52