(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தி எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு இணக்கம் வெளிட்டால் அதன் கொழும்பு மேயர் வேட்பாளரை ஆதரிப்பதற்கு தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெரியவருதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எவ்வாறிருப்பினும் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளரை அறிவித்துள்ளது.
ஏனைய பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்டவை இது குறித்து உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை களமிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிருணிகா பிரேமசந்திரவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதனை தான் ஏற்கப் போவதில்லையென ஹிருணிகா கடந்த வாரம் பகிரங்கமாக அறிவித்தார்.
இந்நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியிலுள்ள சகல தொகுதிகளிலும் இணைந்து களமிறங்காவிட்டாலும், கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் இணைந்து களமிறங்குவதற்கான யோசனையை ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தியிடம் முன்வைத்துள்ளது.
இது குறித்த பேச்சுவார்த்தைகளும் இரு கட்சிகளினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில், அக்கட்சி முன்னிலைப்படுத்தும் மேயர் வேட்பாளருக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
20ஆம் திகதி வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், அன்றை தினம் வரை இந்த யோசனை குறித்து சிந்திப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐ.தே.க. கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் 20ஆம் திகதி தமது மேயர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அதற்கு பொருத்தமான ஒருவர் தயார் நிலையிலேயே உள்ளதாக ஐ.தே.க. தவிசாளர் வஜிர ஆபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சிறிகொத்தாவில் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையில் மாத்திரமின்றி ஏனைய தொகுதிகளிலும் இணைந்து போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவும் தாம் தயார் என்றும் வஜிர ஆபேவர்தன தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM