(எம்.ஆர்.எம்.வசீம்)
தென்கொரியாவில் ஈ 8 விசாவின் கீழ் கிடைக்கப்பெறும் குறுகிய கால தொழிலுக்கு இணைத்துக்கொள்வதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் தகவல் சேகரிக்கப்படுவதில்லை. சமூகவலைத்தலங்களில் இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களினால் தென்கொரியாவின் ஈ8 தொழிலுக்காக இலங்கையர்களை அனுப்புவதற்கு தகவல் சேகரிக்கப்படுவதாக சமூகவலைத்தலங்களில் செய்தி பரவி வருகிறது. அதில் எந்த உண்மையும் இல்லை. ஈ8 விசாவில் தொழிலாளர்களை அனுப்புவதற்கு இதுவரை எமக்கு அரசாங்கத்தினால் அனுமதி கிடைக்கவில்லை. ஈ8 விசா தொடர்பில் செயற்படுத்துவதற்கு தேவையான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் ஆரம்பமாக அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டுளோம்.
அதுதொடர்பில் தற்போது தெனிகொரிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருகிறோம். இந்த விசாவில் தொழிலுக்கு அனுப்புபவர்களின் தொழில் தகைமை, வயதெல்லை. அவர்களின் சம்பளம், தங்கி இருக்கும் காலம், மீ்ண்டும் நாட்டுக்கு எவ்வாறு திருப்பி அழைப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம். இந்த தொழிலுக்கு 8மாதங்கள்தான் காலம் என்றால், அதுபோன்று 3 தவணைகள் அவர்களுக்கு அந்த நாட்டில் தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதன்போது 2வருடங்கள் வரை அங்கு இருக்க முடியும். என்றாலும் இதுதொடர்பில் கொரிய அரசாங்கத்திடமிருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை.
ஈ8 விசாவில் தென்கொரியாவுக்கு அனுப்ப முடியும் என யாராவது வெளிநபர்கள் தெரிவிப்பதாக இருந்தால், அது பொய்யாகும். அதற்காக பணம், கடவுச்சீட்டு சேகரிப்பதாக இருந்தால் அது தவறாகும். இரண்டு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னரே பணியகத்துக்கு தொழில் நிமித்தம் இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கிறது. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட குறிப்பிட்டதொரு காலம் செல்லும்.
அதனால் ஈ8 விசாவில் தென்கொரியாவில் தொழிலுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாராவது பணம் சேகரிக்கும் யாருக்கும் பணம் வழங்க வேண்டாம். அது முற்றிலும் சட்டவிரோத செயலாகும். இது தொடர்பில் இரண்டு முறைப்பாடுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு விசாரணை பிரிவுக்கு தெரிவித்திருக்கிறேன். அதேநேரம் ஈ8 விசாவில் தொழில் வழங்குவதாக இருந்தால், அது இலங்கை வெளிநாட்டு வேலைவய்ப்பு பணியகத்தினால் மாத்திரமே வழங்கப்படும். வேறு நபர்கள் யாருக்கும் இதில் தொடர்புபட முடியாது. ஈ8 விசாவில் தொழில் வாய்ப்பு கிடைக்கும்போது அது தொடர்பில் ஊடகங்கள் ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM