(நெவில் அன்தனி)
காலி சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (13) ஆரம்பமான யாழ்ப்பாணம் அணிக்கு எதிரான தேசிய சுப்பர் லீக் 4 - நாள் கிரிக்கெட் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ, கவின் பண்டார, சரித் அசலன்க ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் கொழும்பு அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 374 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நவோத் பரணவித்தான, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது நவோத் பரணவித்தான 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 113 ஓட்டங்களாக இருந்தபோது தனஞ்சய லக்ஷான் 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந் நிலையில் அவிஷ்க பெர்னாண்டோவும் கவின் பண்டாரவும் 3ஆவது விக்கெட்டில் 172 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கவின் பண்டார 77 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.
மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அவிஷ்க பெர்னாண்டோ 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 144 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.
அணித் தலைவர் சரித் அசலன்க 51 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழந்தன.
துஷான் ஹேமன்த 24 ஓட்டங்களுடனும் முடித்த லக்ஷான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மேர்வின் அபினாஷ் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM