(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) ஏற்பாடு செய்யப்பட்டு வியாழக்கிழமை (13) ஆரம்பமான தேசிய சுப்பர் லீக் 4 - நாள் கிரிக்கெட்டின் முதலாவது போட்டியில் கண்டி அணியை எதிர்த்தாடிவரும் காலி அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்தேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் நிப்புன் தனஞ்சய குவித்த ஆட்டம் இழக்காத சதம், இலங்கை வீரர்களான ஓஷத பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் காலி அணி பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிவரும் நிப்புன் தனஞ்சய இரண்டு இணைப்பாட்டங்களில் பங்களிப்பு வழங்கி அணியைப் பலப்படுத்தினார்..
ஆரம்ப விக்கெட்டில் ஓஷத பெர்னாண்டோவுடன் 107 ஓட்டங்களைப் பகிர்ந்த நிப்புன் தனஞ்சய, 4ஆவது விக்கெட்டில் சதீர சமரவிக்ரமவுடன் மேலும் 143 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் நிப்புன் தனஞ்சய 135 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஓஷத பெர்னாண்டோ 57 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 31 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 78 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நுவனிது பெர்னாண்டோ, சமிந்து விக்ரமசிங்க, ரவிந்து பெர்னாண்டோ, மொஹமத் டில்ஷாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM