இன்றைய திகதியில் உயர்கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்கள் அரசாங்க பணிகளில் சேருவதை இலக்காக கொண்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேக பயிற்சி வகுப்புகளிலும் இணைந்து பயிற்சி பெறுவதையும் காண்கிறோம்.
சிலருக்கு மட்டும்தான் அரசாங்கப் பணி கை கூடுகிறது. இந்நிலையில் அரசாங்கப் பணிகள் கிடைப்பதற்கும், அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான வழிபாட்டினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதனை உறுதியாகவும், நம்பிக்கையாகவும் கடைபிடிக்கும் போது அரசாங்கத்தின் அனுசரணையும், அரசாங்க பணிகளுக்கான ஆணையும் கிடைக்கும் என்றும் சோதிட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு 51 எலுமிச்சம் பழத்தை எடுத்து அதற்கு சந்தனமும், குங்குமமும் பொட்டிட்டு, அதனை மாலையாக கோர்த்து, அருகில் இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் உள்ள லட்சுமி நரசிம்மருக்கு சாற்றி வழிபட வேண்டும்.
அதே தருணத்தில் அரசாங்கம் தொடர்பான அனுசரணைகளை கேட்பதற்கு விண்ணப்பிக்கும் போதும் அரசாங்க பணிக்கான தேர்வுகளை எழுதும் போதும் உடன் லட்சுமி நரசிம்மரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தேர்வு எழுத வேண்டும். பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
நேர்காணலை மேற்கொள்ள வேண்டும். இப்படி தொடர்ச்சியாக லட்சுமி நரசிம்மர் வழிப்பாட்டையும் , லட்சுமி நரசிம்மர் மீது நம்பிக்கையும் வைத்தால் அரசாங்கப் பணி கிடைப்பது உறுதி. அத்துடன் அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதும் உறுதி.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM