எம்முடைய நாக்கின் பின்பகுதியில் சிலருக்கு நிற மாற்றமோ அல்லது வீக்க பாதிப்புகளோ ஏற்படக்கூடும். இதனால் ஏதேனும் பாரிய சுகவீன பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பலரும் அச்சம் அடைவர். இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்குரிய சிகிச்சை குறித்து வைத்தியர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
நாக்கின் பின் பகுதியில் சிலருக்கு வெள்ளை நிறத்திலான அல்லது மஞ்சள் நிறத்திலான திட்டுகளோ அல்லது சிறிய அளவிலான கட்டிகளோ ஏற்படக்கூடும்.
இதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ..! என மனதில் அச்சமடைவார்கள். இதைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. எம்முடைய நாக்கின் பின்பகுதியில் நிணநீர் நுண்ணறை என்பவை அமையப்பெற்றிருக்கிறது. இத்தகைய நுண்ணறையில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக இவை பாதிப்புக்குள்ளாகி கட்டிகளாகிறது அல்லது வீக்கமடைகிறது.
உங்களுடைய இரைப்பை பகுதியில் உற்பத்தியாகும் அமிலங்கள் தொண்டை பகுதி வரை வந்து இத்தகைய நிணநீர் நுண்ணறைகளை தாக்கலாம். வேறு சிலருக்கு சளி தொல்லை பாதிப்பு இருக்கும் போது இது தொண்டையின் பின் பகுதிக்கு சென்று இத்தகைய நிணநீர் நுண்ணறைகளை தாக்கலாம்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர் நிபுணர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை வைத்தியர்கள் துல்லியமாக அவதானிப்பர். அவர்கள் நாக்கின் பின்பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து அதற்குரிய பிரத்யேக நவீன தொழில் நுட்பங்களால் மேம்படுத்தப்பட்ட மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் கிருஷ்ணகுமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM