தெலுங்கு நடிகை ரூபா கதையின் நாயகியாக நடித்து வெளியான 'எமகாதகி' எனும் அமானுஷ்ய திரில்லர் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்காக சென்னையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் பங்குபற்றினர். இந்நிகழ்வில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் பேசுகையில், '' இயக்குநர் அமீரின் உதவியாளரான நான் இப்படத்தின் ஐடியாவை தயாரிப்பாளர் ராகுலுடன் பகிர்ந்து கொண்டேன் இதைக் கேட்டவுடன் படத்தை தயாரிக்கலாம் என்று நம்பிக்கை அளித்தார். இதே ஐடியாவை ஒளிப்பதிவாளர் சுஜித்திடம் தெரிவித்த போது அவரும் ஊக்கம் கொடுத்தார்.
ஒரு கிராமம், அந்த கிராமத்து மக்கள்- அந்த கிராமத்தில் ஒரு வீடு- என கதை சம்பவங்கள் நிகழும் இடம் குறைவு என்றாலும், ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர் -உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுடைய முழுமையான பங்களிப்பினை வழங்கி, படத்தினை தரத்துடன் உருவாக்கினர். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படம் வெளியானவுடன் ரசிகர்களுக்கு பிடித்திருந்ததால் வெற்றி பெற்று இருக்கிறது . இதுபோன்ற சின்ன பட்ஜட்டிலான படைப்புகளுக்கும், புதுமுக கலைஞர்களுக்கும் ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM