இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான விஜய் அண்டனி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சக்தி திருமகன்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, வாகை சந்திரசேகர் , சுனில் கிருபளானி, செல் முருகன், திருப்பதி ரவீந்திரா, கிரண், ரினி போத் , ரியா ஜித்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். பொலிட்டிக்கல் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தமிழில் 'சக்தி திருமகன்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'பத்ரகாளி' என்ற பெயரிலும் வெளியாகும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அரசியல், ஊழல், மோசடி, எக்சன், சென்டிமென்ட், என கலந்து கட்டி இருப்பதால் கொமர்சல் என்டர்டெய்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM