புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினை உடைத்து 6,10,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 25.02.2025 அன்று இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே புதன்கிழமை (12) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஏறாவூர், மட்டக்களப்பில் வைத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி (45555) அஜித் தலைமையில் பொலிஸ் கொஸ்தாபல்களான (91451) குமார, (105152) கவிராஜ், (102757) அர்ஜன் ஆகிய பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரினை நேற்றையதினம் (12.03.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 25.03.2025 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM